Be Careful With These Zodiac Signs in Tamil
நண்பர்களே வணக்கம் தினமும் ஒவ்வொரு ராசிக்காரர்களைபற்றிய செய்திகளை உங்களுக்கு தெரியப்படுத்தி கொண்டு வருகிறோம். அனைவருமே நல்லவர்கள் தான் ஆனால் ஆன்மீக ரீதியாக ஜாதகத்தில் உள்ள கட்டத்தில் உள்ள 12 நவக்கிரகரங்களின் மாற்றங்களினால் நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் சில நேரங்களின் நம்மை அறியாமல் சில வகையான காரியங்களை செய்து விடுகிறோம். அந்த வகையில் இன்று கோள்களின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த ராசிகளில் உங்கள் ராசி உள்ளதா வாங்க பார்க்கலாம்..!
மீன ராசி:
ராசிகளில் 12 ராசியாக இருப்பது மீனம் கடைசியாக இருந்தாலும் இவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களின் நட்பு உறவை ஏற்படுத்து ஈசியாக இருந்தாலும். இவர்களிடம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். காரணம் இவர்கள் நட்பு என்று பார்க்க மாட்டார்கள் நீ தவறு என்றால் தவறு தான், அதேபோல் நீ செய்தது சரி என்றால் சரி என்று சொல்வார்கள். தெரியாமல் அவர்களை மன கஷ்டத்தில் நீங்கள் அவர்களை தள்ளி விட்டாலும் அவர்களிடம் மறுமுறை சென்று பேசினால் அவர்களின் உறவை உங்களால் புதுப்பிக்க முடியாது அது மிகவும் கடினம். அதனால் மீன ராசிக்காரர்களின் நட்பு வேண்டும் என்றால் கவனம் தேவை.
கும்பம் ராசி:
இந்த ராசிக்காரர் மிகவும் சுயநலவாதியாக கூட இருக்கலாம். காரணம் மற்றவர்களின் நட்பினை இவர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியாது இவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்களுடைய நண்பர்களை அந்த ஆபத்தில் சிக்க வைத்துவிடுவார்கள். இவர்கள் பேசும் வார்த்தைகள் ஊசியில் தைப்பது போல் இருக்கும். எது சரி என்று யோசிக்கலாம் நட்பினை முறித்துக்கொள்வார். இப்போ யோசித்து பாருங்கள் இவர்களின் நட்பு வேண்டுமென்றால் நீங்கள் பலி ஆடாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் ராசி:
விருச்சிக ராசிக்காரர் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நட்புடன் பழகி வந்தால் விருச்சிக ராசிக்காரர் உங்களை முதலில் நட்புடன் பார்த்தாலும் அவர்களின் நோக்கம் உங்களிடமிருந்து வரும் பயனை மட்டுமே பார்ப்பார். விருச்சிக ராசிக்காரர் உங்களிடமிருந்து அவர்கள் நினைத்ததை பெற்றுக்கொண்டால் உங்களிடம் இருக்கும் நட்பை உடைத்துவிடுவார். பழகுவதும் குறைந்து விடும். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் உண்டாகும்.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்கள் உங்களின் நட்பினை அவ்வளவு எளிதாக முறித்துக்கொள்ள மாட்டார்கள் காரணம் இவர்கள் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிலையாக இருக்கமாட்டார். முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பார். கன்னி ராசிக்காரர் எந்த விஷயத்திலும் நிலையாக இருக்க மாட்டார்கள். எனவே கன்னி ராசியில் நண்பர்கள் இருந்தால் அவர்களிடமிருந்து எதையுமே எதிர்பார்க்காதீர்கள்.
கடகம் ராசி:
கடக ராசிக்காரர்களிடம் பழகுவது என்பது பெரிய கல்லை கரைப்பது போல் தான். காரணம் இவர்களிடம் எவ்வளவு நாட்கள் பழகினாலும் இவர்கள் உங்களை பற்றி புரிந்து கொண்டால் மட்டுமே அவர்கள் உங்களிடம் தனிப்பட்ட விஷயத்தை பகிர்ந்துகொள்வார். யாரிடமும் ஈசியாக வெளிப்படையாக நடந்துகொள்ள மாட்டார். இவரின் நட்பு மிகவும் தூய்மையானது ஆனால் உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உங்களை விட்டு பின்வாங்கி விடுவார். அதனால் நட்புடன் இருக்கலாம் ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |