ஆண்களின் தாடியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் ..!

Thadi in Tamil

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் ஆண்களின் தாடி அமைப்பை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக வைப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். நம் முன்னோர்கள் காலத்தில் தாடியை வைக்க மாட்டார்கள். கொஞ்சமாக வளர்ந்திருந்தாலும் சேவ் பண்ணிடுவார்கள். ஆனால் இப்போது தாடி வைப்பது ஸ்டைலாக மாறி விட்டது. நீங்கள் எப்பொழுதும் வைக்கும்  தாடி அமைப்பை வைத்து உங்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.!

French Beard Styles Tamil:

French Beard Styles Tamil

இந்த பியர்ட் ஸ்டைல் வைத்திருப்பவர்கள் எந்த விஷயத்தையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். நீங்கள் எந்த ஒரு கஷ்டமான செயலையும் புத்தி கூர்மையுடன் சிறப்பாக கையாள்வீர்கள். பிரச்சனைகளை சமாளிப்பதில் வல்லவராக இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வீர்கள். இவர்களிடம் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். இவர்களின் வாழ்க்கை துணை தன்னிடம் எதையும் மறைக்க கூடாது என்று நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அன்பாகவும், அக்கரையாகவும் இருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கையை இப்படி முறுக்கிறீங்களா..! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்

Stubble Beard Styles in Tamil:

Stubble Beard Styles

நீங்கள் ஷார்ட் தாடியை உடையவராக இருந்தால் எப்பொழுதும் எனர்ஜியுடன் இருப்பீர்கள். உங்களிடம் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். உங்களின் தோற்றம் மற்றவர்களை ஈர்க்க கூடிய அளவிற்கு இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை மாற்றி கொள்வீர்கள். நீங்கள் என்ன தான் ஒரு விஷயத்தை புத்தி கூர்மையுடன் செயல்பட்டாலும் உங்களிடம் குழந்தை தனம் அதிகமாக இருக்கும்.

Goatee Beard Styles in Tamil:

Goatee Beard Styles

வாய்க்கு கீழ் மட்டும் தாடி வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பீர்கள். அதாவது இவர்களை நம்பி எந்த செயலையும் கொடுக்கலாம் அதை சிறப்பாக செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் எந்த உதவி கேட்டாலும் அவர்களுக்கு செய்து கொடுப்பீர்கள். மேலும் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அந்த இடத்திற்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று நினைப்பார்கள். சுருக்கமாக சொன்னால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை துணை அன்பாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

Full Beard Styles in Tamil:

Full Beard Styles

முகம் முழுவதும் தாடி வைத்திருப்பவர்கள் பார்ப்பதற்கு ரவுடி மாதிரி இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பழகி பார்த்தால் தான் தெரியும் அவர்களுக்குள் எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கிறது என்று தெரியும். இவர்கள் நண்பர்களை மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு நட்பு வட்டாரம் பெரியதாக இருக்கும். இவர்களின் இலக்குகளை அடைவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். மேலும் இவர்களிடம் நம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாக காணப்படும். இவர்களுக்கு சீக்கிரமாக கோவம் வராது அப்படி வந்துவிட்டால் பயங்கரமாக கோவத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்