அதிகாலையில் எழுந்தால் கிடைக்கும் நன்மைகள்
நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் பிரம்ம முகூர்த்த என்றால் என்ன?, ஏன் அந்த நேரத்தில் திருமணம் செய்கிறார்கள் அதேபோல் அந்த நேரத்தில் என்ன நினைத்தாலும் நடக்குமாம் இதுதெல்லாம் உண்மையா என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..! பொதுவாக சாதிக்க கூடிய அனைவருமே அதிகாலையில் எழுந்திருப்பார்களாம்..! காரணம் அவர்களுக்கு தெரியும் பிரம்ம முகூர்த்தத்தின் சக்தி எப்படி பட்டது என்று..! விஷயம் தெரிந்தவர்கள் அனைவருமே பிரம்மா முகூர்த்தத்தில் எழுந்துகொள்வார்கள்..!
பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?
தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தம் என்பது உண்டு அந்த நேரத்தில் எழுந்து படித்தால் கண்டிப்பாக மனதில் படும் அதேபோல் அந்த நேரத்தில் தியானம் மேற்கொண்டாலும் அது நிச்சயம் நடக்கும்.
பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு:
காலை 3 மணி முதல் 5 மணி வரை பிரம்மா முகூர்த்தம் ஆகும்.
பிரம்ம முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும்?
பிரம்மா முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்தாலும் நிச்சயம் நடக்கும்.
காரணம் ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்கிறேன்:
இப்போது நாம் ஒருவரை பார்த்துக்கொண்டே இருக்கும் போது மனதில் அவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று மனதில் சொல்லிக்கொண்டே இருந்தால் அது அவர்கள் நம்மை நிச்சயம் பார்ப்பார்கள். இதனை யார் செய்திருக்கிறீர்கள்.
அதேபோல் ஒரு கடைதெருக்கு செல்லும் போது ஒரு வியாபாரி ஒருவர் மாம்பழம் வாங்க வேண்டும் என்று அந்த வியாபாரி நினைத்து உங்களை நினைத்தால் கண்டிப்பாக நிச்சயம் வாங்குவீர்கள் ஆனால் அவரை விட உங்களுக்கு வேறு ஒன்று மனதில் நினைத்து சென்றால் நிச்சயம் உங்கள் வேலையை தான் பார்ப்பீர்கள். இது ஒரு வகையான மன எண்ணம் என்கிறார்கள்.
பகல் நேரங்களின் அனைத்து மனிதர்களுக்கும் பல எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும் அப்படி இருக்கும்பட்சத்தில் மனிதர்களின் எண்ணங்கள் மேலோங்கி இருக்கும்.
அதே நாம் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து என்ன நினைத்தாலும் நிச்சயமாக நடக்கும். காரணம் மனிதர்களின் எண்ணமானது கீழ் இருக்கும் பூலோகத்தின் சக்தியானது மேலோங்கி இருக்கும் அதனால் நிச்சயம் அது நாம் என்ன நினைத்தாலும் கண்டிப்பாக நடக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |