அமாவாசை அன்று பெண் பார்க்க செல்லலாமா..?

Can I Go to See a Girl on Amavasya in Tamil

இன்றைய காலகட்டம் எவ்வளவு தான் நவீனமாக மாறி இருந்தாலும் கூட இன்றைய காலகட்டத்திலேயும் மாறாமல் உள்ள சில விஷயங்களில் ஒன்று தான் ஆன்மிக நம்பிக்கைகள். ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்திலேயும் நம்மில் பலரும் பல விரதங்களை மேற்கொள்கின்றன. அப்படி நம்மால் மேற்கொள்ளப்படுகின்ற பல விரதங்களில் ஒன்று தான் இந்த அமாவாசை விரதமும்.

இந்த அமாவாசை அன்று எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அது உண்மைதானா அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு அமாவாசை அன்று பெண் பார்க்க செல்லலாமா..? என்ற கேள்வி இருக்கும். அப்படி உங்களின் மனத்திலேயும் இந்த கேள்வி உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா

அமாவாசை அன்று பெண் பார்க்க செல்லலாமா..?

Can I Go to See a Girl on Amavasya in Tamil

திருமணம் என்பது இருமனம் இணையும் தருணம் மட்டுமில்லை இருவரின் வாழ்க்கையும் இணையும் தருணம் ஆகும். அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வை பொதுவாக பெரியோர்கள் இணைந்து பேசி முடிவு செய்து தான் செய்வார்கள்.

அப்படி பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு நடத்தப்படும் திருமணத்திற்கு முதல் படியாக உள்ளது தான் பெண்பார்க்க செல்வது. அப்படி பெண்பார்க்க செல்லும் பொழுது நல்ல நாளை பார்த்து தான் செல்வார்கள்.

ஆனால் ஒரு சிலரின் மனதில் எந்தெந்த நாட்களில் பெண்பார்க்க செல்லலாம் என்ற கேள்வி இருக்கும். அதிலும் குறிப்பாக அமாவாசை அன்று பெண்பார்க்க செல்லலாமா..? என்ற கேள்வியும் இருக்கும்.

 அமாவாசை அன்று பெண் பார்க்க செல்லலாமா..? என்ற கேள்விக்கான பதில் செல்லக்கூடாது என்பது தான். 

ஆம் நண்பர்களே பொதுவாக அமாவாசை விரதம் என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க உகந்த நாள் என்பதால் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் அளிக்கலாம்.

ஆனால் அன்று வேறு எந்த நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது. ஆனால் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை நாட்களில் எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்யலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்