Can Ladies Wear Rudraksha in Tamil
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பதிவில் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா அணியக்கூடாதா என்பதை பற்றி பார்க்க போகிறோம். பெண்கள் பொதுவாக கழுத்தில் ஜெயின், மணி, சாமி கயிறு இதுபோன்றவற்றை அணிவது உண்டு. அந்த வரிசையில் ருத்ராட்சமும் ஒன்று. அத்தைகய ருத்ராட்சத்தை பெண்களில் அணிவதால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்ள தொடரை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஒரிஜினல் ருத்ராட்சம் கிடைக்கும் இடம்
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா.?
பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சத்தை அணிவதற்கு தயக்கம் இல்லாமல் தாராளமாக அணியலாம். ஆண், பெண் யாராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அதுபோல முதலில் ருத்ராட்சத்தை அணியும் போது உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் கோவிலில் வைத்து தான் அதன் பிறகு அணிய வேண்டும்.
ருத்ராட்சம் சிவ பெருமானின் ஒரு கண்ணாக இருக்கிறது. அந்த ருத்ராட்சத்தை நாம் அணியும் போது சிவனின் முழு அருளும் நமக்கு கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள்.
அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து இருப்பவர்கள் வேகம் மற்றும் அதிக விவேகத்துடன் செயல்படும் திறமை கொண்டவராக இருப்பார்கள். இயல்பாகவே பெண்களுக்கு இந்த குணம் இருப்பதால் தாராளமாக ருத்ராட்சம் அணியலாம்.
அதுபோல ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்கள் எந்த செயலையும் பொறுமையக யோசித்து அதனை நல்ல முறையில் செய்து முடித்து வெற்றி பெற வேண்டும் என்ற என்ன கொண்டவராக இருப்பார்கள்.
ருத்ராட்சம் அணியும் முறைகள்:
ருத்ராட்சத்தில் நிறைய வகைகள் உள்ளன. அத்தகைய ருத்ராட்சத்தை அணியும் முறைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- 1 அல்லது 4 முகம் உள்ள ருத்ராட்சம் குழந்தைகள் அல்லது மாணவர்கள் அணியலாம்.
- 5 முகம் கொண்ட ருத்ராட்சத்தை திருமணமான ஆண்கள், வியாபாரம் செய்பவர்கள் அணியலாம்.
- 1 அல்லது 3 முகம் கொண்ட ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாம்.
அதுபோல நீங்கள் எந்த ருத்ராட்சத்தை அணிந்தாலும் அதை வெள்ளி செயின், தங்க செயின், சிவப்பு கயிறு இவற்றில் எதாவது ஒன்றில் கோர்த்து தான் அணிய வேண்டும்.
ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்:
ருத்ராட்சத்தை நீங்கள் அணியும்போது உங்களை கெட்ட சக்தியிடம் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு வளையமாக காணப்படுகிறது.
ருத்ராட்சத்தை உங்களுடைய உடம்பில் அணியும்போது அது ஒரு புது விதமான ஒளிவட்டத்தை உங்களுக்கு அளிப்பதற்கான ஒரு நல்ல பலன் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அதுபோல எந்த வித மன குழப்பமும் இல்லாமல் தெளிவான வாழ்க்கை முறையினை வாழ்வதற்கு முக்கிய காரணமாக இந்த ருத்ராட்சம் இருக்கிறது.
நீங்கள் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அதில் அதிக நினைவாற்றலை செலுத்தி வெற்றி பெறுவதற்கான ஒரு அறிய வாய்ப்பாகவும் இந்த ருத்ராட்சம் பலன் அளிக்கிறது.
ருத்ராட்சத்தை அணிவதால் உங்களுக்கு சிவ பெருமானின் முழு அருளும் கிடைக்கிறது. அதனால் உடலில் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |