சந்திரனுடன் சுக்கிரன் சேருவதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கக் போகுது ..!

Chandran Sukran Serkkai

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலையை வைத்தே ஒவ்வொரு ராசிகளின் நிலை கூறப்படுகிறது. அந்த வகையில் கிரகங்களில் சுக்கிரன் செல்வம் மற்றும் புகழுக்கு பெயர் பெற்றவர். சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் மே 30 ஆம் தேதியன்று புதன் அதிபதியாக இருக்கும் மிதுனத்தில் இருந்து விலகி சந்திரனுக்கு சொந்தமான கடக ராசிக்குள் நுழைகிறார். ஜுலை 7 ஆம் தேதி வரை கடக ராசிக்குள் இருப்பார். எனவே சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ராகு கேது பெயர்ச்சியில் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனி அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான்  இதுல உங்க ராசி இருக்கா

விருச்சிகம்:

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மேலும் ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்பும் சுபகாரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டும். மாணவர்களுக்கு இந்நேரம் மகிழ்ச்சியானதாக இருக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடகம்:

கடகம்

கடக ராசிக்காரர்களின் உத்தியோகத்தில் நல்ல நிலை ஏற்படும். மே 30 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக இருந்த பணப் பிரச்சனை நீங்கும். மேலும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் எல்லாமே நன்றாகவே நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். மேலும் கடக ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். மேலும் வாழ்க்கை துணையின் மூலம் நிதி உதவி கிடைக்கும். அதுபோல குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மேலும் நீண்ட நாட்களாக தடையில் இருந்த காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும்.

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்..  இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்

மீனம்:

மீனம்

மீன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். திருமணமானவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். மேலும் வாகனம் வாங்கும் நேரமும் கிட்டும். உடல் நலத்தில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. புதிய வருமான வழிகள் வரவும் வாய்ப்பு உள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வேலை மாற்ற கடிதம் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்