காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்? | Crow hit on head in tamil

crow hit on head in tamil

காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்? | Crow hit on head in tamil

Crow hit on head in tamil/ kakka thalayil adithal enna nadakkum:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஒரு பயனுள்ள ஆன்மிக தகவலை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது நாம் சாதாரணமாக ரோட்டில் நடந்து சொல்லும் போது, காகம் தலையில் அடித்து சென்று விடும் இதனை அபசகுனம் என்று பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் சிலர் காகம் தலையில் கொட்டி சென்றால் கிரக தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று கருதி கொள்வார்கள். காகம் தலையில் தட்டி செல்வதற்கும், கிரக தோஷத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தான் உண்மை.

சரி இந்த பதிவில் காகம் தலையிலோ அல்லது உடம்பில் மற்ற இடங்களிலோ தட்டிச் சென்றால் என்ன காரணம்? (Crow hit on head in tamil) அதனால் ஏதாவது தீங்கு ஏற்படுமா? அதனை சரி செய்வதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டத்தை காகம் உணர்த்தும் சகுனம்..!

காக்கா தலையில் தட்டினால் என்ன பலன்? kakam thalaiyil adithal palan in tamil?

காகம் தலையில் அமர்ந்தால் என்ன காரணம்? / Reason for Crow Hitting on Head in Tamil

kaka thalaiyil adithal enna palan:- காகம் தலையில் உட்கார்ந்தால் அது ஒரு சாதாரணமான விஷயம் தான், இதற்காக நாம் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நம் தலையில் காகம் தட்டிச் செல்வதற்கு இரண்டு காரணம் உள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒன்று:-

காகத்திற்கும், முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கிறது, நாம் நம் முன்னோர்களை கும்பிட மறந்திருந்தாலோ அல்லது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்திருந்தாலோ அதை காகத்தின் ரூபத்தில் வந்து  நமக்கு நியாபகம் படுத்தும் வகையில் காகம் நம் தலையில் தட்டிச் சொல்லும்.

இரண்டு:-

பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கு இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தன்மை உள்ளது. எனவே நமக்கு ஏதேனும் ஒரு உடல் உபாதை பிற்காலத்தில் ஏற்பட உள்ளது என்றால், அப்பொழுது காகம் நம்மை கடந்து செல்லும் போது, அது காகத்திற்கு தெரிந்திருந்தால். காகம் நம்மை எச்சரிக்கும் வகையில் நம் தலையில் காகம் தட்டிச் செல்லும்.

இவை இரண்டு காரணங்களும் காகம் நம் தலையில் தட்டிச் செல்வதற்கான காரணமாகும். சரி இதற்கான பரிகாரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

சனி பகவான் பற்றிய ஆன்மீக தகவல்கள்..!

காகம் தலையில் அடித்தால் பரிகாரம்:-

  • நம் வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடலாம்.
  • கோவிலுக்கு சென்று சனீஸ்வர பகவானுக்கு எள்ளில் விளக்கேற்றி வழிபடலாம்.
  • காகத்திற்கு உணவு வைத்து வழிபடலாம்.
  • முன்னோர்களுக்கு அம்மாவாசை அன்று படையல் போட்டு வழிபடலாம்.
  • குறிப்பாக ஊனமுற்றோர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்.

இவ்வாறு காகம் பரிகாரம் செய்வதினால் தோஷங்கள் நீங்கும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்