இந்த 5 விஷயங்கள் தீபாவளி அன்று மறந்தும் செய்யாதீர்கள்..!

Deepavali Andru Seiya Kudatha Vishayangal

தீபாவளி அன்று செய்யக்கூடாத 5 விஷயங்கள் இதோ

Deepavali Andru Seiya Kudatha Vishayangal – நண்பர்களுக்கு வணக்கம்.. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. இந்த தீபாவளிக்கு புது ஆடைகள் எடுப்பது, பலகாரம் செய்வது, பட்டாசு வாங்குவது என்று பலவகையான விஷயங்களை செய்வோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால்.. தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அவற்றை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படிப்போம்.

No: 1

நரகாசுரனை கிருஷ்ண பகவான் வாதம் செய்த நாள் தான் தீபாவளி இதன் நாளில் அதிகாலை எழுத்து நீராட வேண்டும், அதிலும் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து, சிகைக்காய் தேய்த்து தான் குளிக்க வேண்டும். இவற்றில் நாம் செய்ய கூடாத விஷயம் என்னவென்றால் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க கூடாது. இன்றைய ஒரு நாளாவது தலைக்கு நல்லெணெய் வைத்து சிகைக்காய் பயன்படுத்தவும். இதனால் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

தீபாவளி அன்று தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் தீய விஷயங்கள் அனைத்தும் அளித்து, நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம்.

No: 2

தீபாவளி அன்று நேரம் கழித்து குளிக்க கூடாது, அதாவது அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திற்குள் குளிக்க வேண்டும். தீபாவளி அன்றாவது மற்ற நேரங்களில் குளிப்பதை தவிர்த்து விட்டு அதிகாலை குளிக்கவும்.

No: 3

குறிப்பாக தீபாவளி அன்று அனைவருமே குளித்துவிட்டு, புது ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடமாவது ஆசிர்வாதம் பெற வேண்டும். இந்த விஷயத்தை கண்டிப்பாக செய்யாமல் இருக்க கூடாது. பெரியவர்களின் பெரிபுராண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் போதும் உங்கள் வாழ்கை சிறப்பாக இருக்கும்.

No: 4

தீபாவளி அன்று கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீர்கள் அதாவது காலை எழுத்து குளித்துவிட்டு, புது ஆடைகளை அணிந்துவிட்டு கோவிலுக்கு சென்று வாருங்கள். இதன் மூலம் கடவுளின் அருளும், ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

No: 5

தீபாவளி அன்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தேவை இல்லாத சண்டை சச்சரவுகள் இன்றைய நாள் செய்ய வேண்டாம். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? அப்படி ஏற்றவில்லை என்றால் என்ன ஆகும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்