தீபாவளி நோன்பு என்றால் என்ன | Deepavali Nombu Procedure in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் தீபாவளிக்கு நோம்பு இருக்கும் முறையும் இவற்றால் என்ன பயன்கள் என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தீபாவளி என்னும் நல்ல திருநாளில் புது ஆடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவோம். மேலும், பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு நோன்பு இருந்து வழிபாடுவார்கள்.
ஆனால் இந்த நாளில் நோம்பு இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.? தீபாவளி அன்று கேதார கௌரி என்ற விரதம் உள்ளது. இந்த விரதத்தை பொதுவாக பெண்கள் கடைபிடிப்பார்கள். மேலும் இந்த நோம்பு எதற்காக இருக்கப்படுகிறது என்றும், அவற்றை எப்படி விரதம் இருப்பது என்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு.. |
தீபாவளி நோன்பு இருப்பது எப்படி.?
தீபாவளிக்கு நோம்பு இருக்கும் முறை:
- தீபாவளில் கேதார கௌரி விரத நோம்பு ஆனது அம்மனுக்கு இருக்கடிய ஒரு நோம்பாகும். முன்னோர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்கள் இந்த நோம்பை 21 நாட்கள் வரையும் சாப்பிடாமல் விரதம் இருந்து தீபாவளி அமாவாசை விரதத்தை முடிப்பார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் உள்ள பெண்கள் தீபாவளிக்கு வரும் அமாவாசையில் மட்டும் நோம்பு இருந்து முடிப்பார்கள். மேலும் இந்த நோம்பை எப்படி இருப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
- முதலில் இந்த நோம்பை எடுக்கும் பொழுது நம் வீட்டை தூய்மை செய்து விட்டு நீங்களும் குளித்து கொண்டு அதன் பிறகு பூஜை அறையில் இருக்கும் சாமியை அலங்கரிக்கவேண்டும். ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் நோம்பு இருந்து, அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வீட்டில் தீபாவளிக்கு செய்து வைத்திருந்த இனிப்புகளை சாமிக்கு படையலிட்டு வழிபட வேண்டும்.
- கோவிலுக்கு சென்று வந்ததும் வீட்டில் இருக்கும் சாமிக்கு பலகாரங்களை படையலிட வேண்டும். தீபாவளி நோம்பு இருப்பவர்கள் 2 புது துணிகளை வாங்கிக்கொள்ள வேண்டும். நோம்பு இருக்கும் நாளில் வீட்டில் உள்ளவர்களுக்கு அசைவம் செய்யக்கூடாது. நோம்பு விரதம் இருப்பவர்கள் புதிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும்.
- நோம்பு இருப்பவர்கள் கடைகளில் இருக்கும் வண்ண கயிறுகளை வாங்கி சாமியிடம் வைத்து பூஜை செய்து கையில் கட்ட வேண்டும். முக்கியமான ஒன்று அந்த வருடத்தில் உங்கள் உறவினர்கள் யாரும் இறந்து விட்டால் நோம்பு கட்டாயம் இருக்கக்கூடாது.
தீபாவளி நோம்பு பெண்கள் இருப்பதற்கான காரணம்:
- தீபாவளி நோம்பை பொதுவாக திருமணம் ஆன பெண்கள் தன்னுடைய தாலி நிலைத்திருக்க வேண்டும் என்று தன்னுடைய கணவன் எந்த நோய் நொடிகளும் இன்றி நல்லபடியாக இருக்க வேண்டும் என்று இருப்பார்கள்.
- திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை நல்லவராக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |