தீபாவளிக்கு பிறகு இந்த 4 ராசிக்காரர்கள் பண மழையில் நனைவது 100% உறுதி..!

Advertisement

சனி பகவானின் மாற்றத்தால் தீபாவளிக்கு பிறகு இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழையில் நனைவது 100% உறுதி..!

Deepavali Rasi Palan 2022 – வணக்கம் நண்பர்களே.. சனி பகவானின் மாற்றத்தினால் தீபாவளிக்கு பிறகு இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பண மழையில் கொட்டப்போகிறது. அந்த அதிர்ஷ்டம் பேற்றை நான்கு ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? அதனை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்..

தீபாவளி ராசி பலன்கள் 2022 | Deepavali Rasi Palan 2022

மேஷம்:

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு நல்ல பலன்களை சனி பகவான் உங்களுக்கு வாரி வழங்க உள்ளார். உங்களுக்கு 100 சதவீதம் அதிர்ஷ்டகரமான பலன்களை வாரி வழங்குவார். நீங்கள் ஏதாவது வியாபரம் செய்துகொண்டிருந்தாள் அவற்றில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தீபாவளிக்கு பிறகு உங்கள் வியாபாரம் மற்றும் தொழில் நன்கு வளர்ச்சிகரமாக இருக்கும். திருமணம் வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். இந்த கால கட்டத்தில் நீங்கள் புதிய வாகனம், வீடு, மனை இது போன்றவற்றை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் பலவிதமான வெற்றிகள் உங்களுக்கு குவியும்.

மிதுனம்:

மிதுனம்

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கும் தீபாவளிக்கு பிறகு பண மழை பொழிய அதிக வாய்ப்புகள் உள்ளது. உங்கள் நிதிநிலை மிகவும் வலுவானதாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை நாடி வரும், தீபாவளிக்கு பிறகு உங்களது ஒவ்வொரு நாளுமே வரப்பிரசாதம் போல் தான் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் கைகூடும், திருமணம் ஆனவர்களுக்கு திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். மேலும் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமூதாயத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கடகம்:

கடகம்

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கும் தீபாவளிக்கு பிறகு ராஜா யோகம் தான் என்று சொல்லலாம். இவர்களுக்கும் பணம் வரவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் அதிக முன்னேற்றமும் நல்ல பலன்கள் கிடைக்க கூடும். உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான தருணங்கள் நாடி வரும். நீங்கள் செய்யக்கூடிய வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிகம்

இறுதியாக பார்க்க இருக்கும் ராசிக்காரர்கள் தான் விருச்சிகம் அன்பர்கள் தான். தீபாவளிக்கு பிறகு கண்டிப்பாக உங்களுக்கு எந்த வழியில் இருந்தாவது கண்டிப்பாக எதிர்பாராதவிதம் பணம் வரும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கல்வி துறையில் உள்ளவர்களுக்கு சுகப்பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் வரவும் அதிகரிக்கும் இதனால் உங்கள் நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

இதை கிளிக் செய்து படியுங்கள் 👇
2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் அக்டோபர் 25 கடும் அவஸ்தைகளை சந்திக்க போகும் ராசிகள் யார் தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement