எந்த ராசிக்கு ஏழரை சனி
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்குமே பயனுள்ள பதிவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காரணம் சனி திசை என்றால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும் காரணம் அவருடைய நிலைப்பாடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். கடவுள் பக்தி இல்லை என்றாலும் இதனை தெரிந்துகொள்ள கொஞ்சம் ஆர்வமாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் இந்த வருடன் 3 ராசியில் நிலைபெற்று ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிப்பார் அது என்ன பலன் அது யாருக்கு நல்லதை செய்ய போகிறது யாருரை புரட்டி போடப்போகிறது என்று இந்த பதிவில் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
எந்த ராசிக்கு ஏழரை சனி:
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏழரை சனி மற்றும் சனி தசையின் மகாதசையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீதியின் மறு உருவமான சனி பகவான் அனைத்து ஏற்ற வகையில் நன்மை தீமை பலன்கள் இருக்கும்.
தற்போது சனி பகபவான் பிற்போக்கான நிலையில் அமர்ந்திருக்கிறார். வரும் அக்டோபர் 11 ஆம் தேதி அவர் மீண்டும் மார்கி நிலையில் வருவார். எனவே தனுசு, மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் பலன்களை அளிக்கிறார்.
இந்த சனியை 3கட்டமாக பிரிக்கப்படுகிறது:
ஜோதிட சாஸ்திர படி சனிபகவான் பிறந்த ராசியிலிருந்து முதல், இரண்டாம், பன்னிரண்டாம் இடங்களில் இருந்தால், அது ஏழரை நாட்டு சனி என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஏழரை சனி என்பது மூன்று கட்டங்கள் அதில் முதல்கட்டமாக எந்த ராசியில் நிலை பெறுகிறாரோ அந்த ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல பலன்களை அளிக்கிறார், அதேபோல் இரண்டாம் கட்டமாக ராசியில் நிலைபெற்றார் என்றால் ராசியினருக்கு குடும்ப வாழ்க்கையிலும் மற்றும் ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை அளிப்பார் என்று சொல்ல படுகிறது.
தனுசுராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.
அதேபோல் இரண்டாம் கட்டமாக உள்ள சனி பெயர்ச்சி கும்ப ராசிக்கார்ருக்கும், மகர ராசிக்காரரர்களுக்கு மூன்றாம் கட்டமும் நடக்க போகிறது. மேலும் தனுஷ் ராசியிலிருந்து விடுபட்டு ஏழரை சனி விலகி பிறகு மீன ராசிக்கு இடம் பெயருகிறார் அவர்களுக்கு மகாதசை தொடங்குகிறது..சனி பெயர்ச்சி நன்மை அளிக்க இதை செய்யதால் செய்தால் நல்லது:
- சனிபகவானுக்கு உரிய எண்ணெய், கருப்பட்டி, எள், கருப்பு ஆடை, இரும்பு, கருப்பு போர்வை போன்றவற்றை தானம் செய்வது நல்லது.
- நாள் தோறும் சிவன் மற்றும் அனுமனை வணங்குவது சனி பகவானுக்கு மகிழ்ச்சியை தரும்.
- சனி தோஷத்திலிருந்து விடப்பட இதுபோன்ற காலை எழுந்தது குளித்துவிட்டு சனி பகவானை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.
- ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, எண்ணெய் சேர்த்து, அந்த பாத்திரத்தை சனி கோவிலுக்கு தானம் செய்வது நன்மை தரும்.
சனி பகவான் வழிபடும் முறை மற்றும் பரிகாரங்கள்
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |