Do This on Thaipusam in Tamil
தைப்பூசம் தமிழ் கடவுளான முருகப் பெருமானை நினைத்து வழிபடும் நாளாகும். தைப்பூசம் அன்று அனைத்து கோவில்களிலும் வழிபாடுகள் பூஜைகள் நடக்கும். மேலும் அன்றைய தினம் முருக பெருமானை நினைத்து விரதம் எடுத்து மதிய உணவுகளை சாப்பிடுவார்கள். அன்றைய தினம் முழுவதும் முருகனை நினைத்து வழிபடுவது வழக்கம். ஆகவே அன்றைய தினம் இதை மட்டும் செய்யுங்கள் கோடான கோடி நன்மைகள் நடக்கும்.
Do This on Thaipusam in Tamil:
இந்த வருடம் தமிழ் தேதிக்கு தை 11ஆம் நாளும் ஆங்கில தேதிக்கு 25.01.2024 ஆம் நாள் வருகிறது. ஆகவே அன்றைய தினம் இதை மட்டும் செய்யுங்கள்.
உங்களில் வீட்டில் எந்த பிரச்சனை இருந்தாலும், அதாவது நிம்மதி இன்மை, பண பிரச்சனை, நில பிரச்சனை, நோய் பிரச்சனை அனைத்திலிருந்து விடுபட முடியும்.
மேலும் கடன் பிரச்சனை, குழந்தை வரம் வேண்டினாலும் எதுவாக இருந்தாலும் சரி செய்து நன்மைகள் நடக்க இந்த முருகப்பெருமானுக்கு சக்தி அதிகம் உள்ளது.
இந்த தைப்பூசத்திற்கு என்ன விசேஷம் என்றால் பூச நட்சத்திரத்துடன் சேர்ந்து வருவதால் அதை விட முக்கியமாக பௌர்ணமியும் சேர்ந்து வருவதால் அன்றைய தினம் மிகவும் விசேஷமானது. முக்கியமாக முருகப்பெருமான் அவதரித்த நாளாக இந்த தைப்பூசத்தை கொண்டாடுவோம்.
பகிர்ந்துகொள்ளுங்கள் 👉👉 இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2024
அன்றைய தினம் முருகனை நினைத்து நாம் அவரிடம் என்ன வேண்டுதல் கேட்டாலும் அதனை நிறைவேற்றி வைப்பார். அந்த நாள் அன்று நாம் முக்கியமாக நாம் வாங்கும் பொருட்களில் இந்த 3 பொருட்கள் வாங்கி வரவேண்டும். அது என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
அன்று பௌர்ணமி வருவதால் அதற்கு ஏற்ற கல் உப்பை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் கல் உப்பு இருக்கும் என்றாலும் பரவாயில்லை. தைப்பூசம் அன்று புதிதாக கல் உப்பை வைத்து வழிபாடு செய்யுங்கள்.
அடுத்து பச்சை அரிசி வாங்கி கொள்ளுங்கள். அதனையும் வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம் மஹாலட்சமி நம் வீட்டிற்கு வந்து சேருவார்.
அதேபோல் முக்கியமாக தைப்பூசத்தில் எலுமிச்சை பழத்தை வாங்கி வந்து அதனை வீட்டில் வேல் வைத்து வழிபட்டால் அதில் வைத்து வழிபாடு செய்யலாம் அல்லது அதனை இரண்டாக நறுக்கி ஒரு பாதியில் குங்குமம், ஒரு பாதியில் மஞ்சள் என்று தடவி வாசலில் இரண்டு பக்கமும் வைக்கவேண்டும். இப்படி செய்வதால் உங்கள் வீட்டிற்குள் வரும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள் உங்களை பார்த்தாலோ அல்லது வீட்டிற்குள் வந்தாலோ அது நன்மையாக மாறிவிடும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |