நாய் ஊளையிட்டால் என்ன அர்த்தம்..! Dog Constantly Crying at Night..!
Dog Howling Reason in Tamil:- பொதுவாக நாய்கள் மனிதர்களுடன் மிகவும் பாசமாகவும், நன்றியுடனும் இருக்கும். இதன் காரணமாகவே அனைவரது வீட்டிலேயும் செல்ல பிராணியாக நாய்களை வளர்ப்பார்கள். இருப்பினும் சிலர் நள்ளிரவில் நாய் ஊளையிட்டால் அபசகுனம் அல்லது யாருக்காவது மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள். சரி இத்தகைய நாய்கள் நள்ளிரவில் ஊளையிட்டாலோ அல்லது அழுதால் நல்லதா? கெட்டதா? இதற்கு அறிவியல் கூறும் உண்மையான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க…
பல்லி விழும் பலன்..! |
நாய் ஊளையிடுவது ஏன் – Dog Howling Reason in Tamil:-
பொதுவாக அனைவருமே நள்ளிரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருப்போம் அந்த சமயம் திடீரென்று நாய்கள் ஊளையிடும் அல்லது அழுகும் இவ்வாறு நாய்கள் ஊளையிடும் பொழுது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள், இவ்வாறு நாய்கள் ஊளையிட்டால் மரணம் நேரிடும் எனவும் மூடநம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது.
இருப்பினும் நாய்கள் இரவு நேரங்களில் ஊளையிடுவது அல்லது அழுவது என்பது பொதுவான விஷயம் தான். நாய்கள் மனிதர்களிடம் மிகவும் பாசமாக பழகும் விலங்கினம் என்பதால் இரவு நேரங்களில் செல்லப் பிராணியான நாய் தான் தனியாக இருக்கும் பொழுது கவலைப்பட்டு அழுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள், மேலும் இவ்வாறு அழுவதால் நமது கவனத்தை ஈர்க்க செய்வதற்காக இப்படி அழுகின்றது என கூறுகிறார்கள்.
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்..! |
இப்படி அழும்போது அதன் அருகில் நின்று நாம் பேச்சு கொடுத்தால் அது அமைதியாகிவிடும், இவ்வாறு நாய் இரவில் ஊளையிடுவது மரணம் நிகழுமோ அல்லது ஏதாவது கெட்ட சகுனமோ என்று நினைப்பதை நிறுத்தி கொள்ளுங்கள் டெக்னாலஜி இவ்ளோ வளந்துட்ட காலத்துல இன்னும் இதுபோன்ற மூடநம்மிக்கைகளை இனியாவது நம்பாமல் நிம்மதியாக உறங்குங்கள். நன்றி வணக்கம்..! 🙏🙏🙏
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |