வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..?

Dreams About Flying Meaning Explained in Tamil

Dreams About Flying Meaning Explained in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் கனவு வருவது இயல்பான ஒரு விஷயம். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். அப்படி வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒரு பலன்கள் இருக்கும். கனவுகள் என்பது நமக்கு நடக்கக்கூடிய விஷயங்களை முன் கூட்டியே தெரிவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

    இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

பொதுவாக அனைவரும் தூங்கும் போது கட்டாயம் கனவுகள் வரும். ஒரு மனிதனின் ஆழ்மனதில் புதைக்கப்பட்டிருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடு தான் கனவுகள் என்று சொல்லப்படுகிறது.

அதுபோல நமக்கு வரும் ஒவ்வொரு கனவுகள் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்கிறது என்று இன்றும் நம்பப்படுகிறது.

சிலருக்கு பாம்பு கடிப்பது போல, யானை துரத்துவது போல, விலங்குகள், பறவைகள், உறவினர்கள் மற்றும் இறந்தவர்கள் வருவது போன்ற கனவுகள் வரும். இந்த கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. அதுபோல தான் இந்த பறப்பது போல் கனவு காண்பதும்.

 பறப்பது போல் கனவு கண்டால் அவர் சுதந்திரமாக இருக்கிறார் என்று அர்த்தம். அவர் மனதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை என்று அர்த்தம். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. அதேபோல நல்ல நிகழ்வுகள் அவர் வாழ்க்கையில் நடக்க போகிறது என்று அர்த்தம். அதேபோல அவர் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேற போகிறது என்பதை கூறுகிறது.  
கனவு பலன்கள்..!

விமானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்: 

தூங்கும் போது விமானத்தில் பறப்பது போல் கனவு கண்டால் அவரின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம். அவர் சில விஷயங்களை பொறுமையாக கையாள வேண்டும்.

அதுபோல சில இலக்குகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்த கனவு அவர் வாழ்க்கையில் வெற்றி பெற போகிறார் என்பதை உணர்த்துகிறது.

பாராசூட்டில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்: 

பாராசூட்டில் பறப்பது போல் கனவு கண்டால் அவர்களின் அமைதியை கெடுக்கும் நிகழ்வுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம். இதனால் எதிர்பாராத சிக்கல்கள் வந்து சேரும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல், உடன் இருப்பவர்களால் ஏதும் சிக்கல்கள் வரப்போகிறது என்பதை கூறுகிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்