சனியின் உச்சத்தால் மார்ச் 6 ஆம் தேதி முதல் இந்த ராசியாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..?

Advertisement

சனியின் உச்சம் 

இன்றைய ஆன்மிகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் காணப் போகிறோம். அந்த கால கட்டத்தை விட நாம் வாழும் இந்த காலம் எவ்வளவு மாறி இருந்தாலும், ஆன்மிகம் மாறாத ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் பற்று கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கிறது. அதில் குருப்பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஏற்பட்டால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதுபோல ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்காது. அந்த வகையில் இன்று சனியின் உச்சத்தால் எந்த ராசிகளுக்கு கஷ்டம் ஏற்பட போகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! உங்கள் ராசி இதில் இருக்கா..?

சனியின் உச்சம் எந்த ராசிகளுக்கு ஆபத்து..? 

நீதிபதியின் கடவுளான சனி பகவான் மார்ச் 6-ம் தேதி இரவு கும்ப ராசியில் உச்சம் பெறுகிறார். அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சில சிரமங்கள் அதிகரிக்கும். கஷ்ட காலம் தொடங்க போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இங்கு பார்ப்போம்.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதிக்கு மேல் கஷ்டம் காணப்படும். முதலீடு செய்யும் நபர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்காது. அதனால் நல்ல விஷயங்கள் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த நிலையில் செலவுகள் அதிகமாக காணப்படும். போதிய வருமானம் கிடைப்பதில் கொஞ்சம் தாமதமாக இருக்கும். பணத்தட்டுப்பாடு மற்றும் பண நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மார்ச் 12 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்டம் காத்து கொண்டிருக்கிறது..!

கன்னி:

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது பேசுவதை அறிந்து நிதானமாக பேசவேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.  திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணவரவு உங்களுக்கு குறைந்து காணப்படும்.

சுக்கிரன் மாற்றத்தால் இந்த 3 ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

மகர ராசி:

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சில தகராறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தொழில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.

மீன ராசி:

மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. மீனா ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் அனைத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement