Ear Personality Test in Tamil
வணக்கம் நண்பர்களே..! உங்களை பற்றி மற்றவர்கள் சொல்லி தான் கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்களை பற்றி நீங்களே படித்தால் சுவாரஸ்யமாக தான் இருக்கும். சில நபர்கள் ஒருவரிடம் பழகிய கொஞ்ச நாட்களிலே என்னை பற்றி புரிந்து வைத்ததை சொல் என்று கேட்பார்கள். அதற்கெல்லாம் இனி அவசியமே இல்லை. உங்களின் பல், மூக்கு, நெற்றி, உதடு, விரல்கள், கை முறுக்கும் விதம் போன்றவை வைத்து உங்களின் குணம் எப்படி இருக்கும் என்று பதிவிட்டுள்ளோம். இப்போது காதுகளை வைத்து உங்களின் குணம் எப்படி இருக்கும் என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!
பெரிய காது உடையவர்கள்:
இந்த பெரிய காது உடையவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளை மட்டும் சந்திப்பார்கள். தோல்வி என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. எந்த செயல்களையும் நிதானமாக செய்ய கூடியவர்கள்.
காதுகளில் முடி இருப்பது:
காதில் முடி முளைத்தவர்கள் எல்லா விஷயத்திலும் சிறந்த மனிதராக இருப்பார்கள். இவர்கள் எந்த வேலை செய்தாலும் நேர்மையாகவும், நியாமாகவும் செய்து முடிப்பார்கள். இந்த வேலை தான் செய்ய வேண்டும். அந்த வேலை செய்ய கூடாது என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். எந்த வேலையையும் குறைத்து எடை போட மாட்டார்கள். எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
காது மட்டும் கருப்பாக இருக்க கூடியவர்கள்:
காது மட்டும் கருப்பாக இருக்க கூடியவர்கள் மற்றவர்களை காய படுத்தாமல் பேச கூடியவர்கள். மேலும் இவர்கள் அமைதியான குணம் உடையவர்கள். இவர்களிடம் உதவி என்று யாரும் கேட்டு வந்தால் இவர்களுக்கு இல்லாமல் இருந்தாலும் உதவி கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். மிகவும் இரக்க குணம் நிறைந்த மனிதர்களாக இருப்பார்கள்.
காது மட்டும் வெள்ளையாக இருப்பவர்கள்:
இவர்களுது முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும். இவர்களின் கண் முன்னே ஏதாவது அநியாயம் நடந்தால் அதை பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள். அதை தட்டி கேட்கும் திறமை உடையவர்கள். இவர்களின் கூட இருப்பவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர்கள். இவர்களால் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது.
தொங்கிய காது உடையவர்கள்:
தொங்கிய காது உடையவர்கள் எந்த செயலையும் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக செய்து வெற்றி காண்பார்கள். மற்றவர்களின் உதவியை என்றும் நாட மாட்டார்கள்.
ஒட்டிய காது உடையவர்கள்:
இவர்களின் குணத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இவர்களின் பேச்சால் மற்றவர்களை ஈர்த்து விடுவார்கள். ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதில் வல்லவராக இருப்பார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |