எந்த ராசிக்கு நிம்மதியான வாழ்க்கை
நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் ஏழரை சனி யாரை சிறப்பாக வாழவைக்க போகிறது அதேபோல் யாருடைய வாழ்க்கையை மாற்ற போகிறது என்பதை பற்றி தான் இந்த பதிவு. இதற்கு முன் பதிவிட்டபொழுது யாரை சனி பகவான் புரட்டி எடுக்க போகிறார் என்று பதிவிட்டுருந்தோம் இன்று யாருக்கு நிம்மதியான வாழ்க்கையை அளிக்க போகிறார் என்று தெரிந்துகொள்ள போகிறோம் வாங்க தெரிந்துகொள்வோம்..!
தனுசு ராசி:
இந்த தனுசு ராசிக்காரர் கடந்த ஏழரைவருடமாக சனி பகவானால் நிறைய கஷ்டங்களை தந்திருப்பார். சொந்தம் பந்தம் போன்றவற்றியில் நிறைய எதிர்ப்புகளையும் பேச்சுகளையும் நிறைய பெற்றிருப்பார். சனி பகவானால் நிறைய அல்லோலப்பட்டு இருப்பீர்கள். இனி உங்களுக்கு கஷ்டங்கள் குறையும். அதற்கு தீர்வு வந்துவிட்டது. குடும்ப சனியில் இருந்து விலகுவதால் திருமண சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்கள் ஒற்றுமை நிலையாக இருக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள் குடும்பத்தில் ஆரோக்கிய பிரச்சனை இருந்துவந்தாலும் அது சிறப்பாக இருப்பார்கள். லாபம் அதிகரிக்கும். இதுவரை கஷ்டங்களை மட்டும் அளித்த சனி பகவான் இனி லாபம் தரும் பக்கத்தை உங்கள் பக்கம் திருப்பி உள்ளார். இதனால் மனதில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. புதிய வேலையையும் ஏற்படுத்தி தருவார். வியாபாரத்தில் தடைகள் நீங்கும். அதனால் உங்கள் ராசிக்கு சனி பகவான் இனி நல்ல காலத்தை மட்டும் தருவார்.
மகர ராசி ஏழரை சனி காலம் 2023:
இந்த ராசிக்காரர் கடந்த 5 வருடமாக சனியின் கையில் இருந்து வருகிறீர்கள். உங்களை பிடித்த ஏழரை சனியிலிருந்து ஜென்ம சனி உங்களிருந்து விடை தருகிறார். ஏழரை சனி கடைசி இரண்டு ஆண்டு பாத சனியாக தொடர்வதால் கவனம் தேவை அடிக்கடி கால்களில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டரை ஆண்டு கஷ்டங்களை கடந்து விடுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் முடிவுக்கு வரும். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுகிறது. அதனால் வீடு காட்டக்கூடிய யோகம் உங்களுக்கு இருக்கிறது. மன அழுத்தம் பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.
கும்ப ராசி ஏழரை சனி எப்போது முடியும்:
கும்ப ராசிக்கு விரைய சனி முடிந்து இரண்டரை ஆண்ட ஜென்ம சனி தொடர்கிறது. கடந்த இரண்டு வருடமாக சம்பாதித்த அனைத்து பணத்தையும் விரையமாக செலுவு செய்து இருப்பீர்கள். தலைக்கு நிறைய பாரத்தை கொடுத்திருப்பார்கள். சனி பகவான் அடுத்து அடுத்து நிறைய கஷ்டங்கள் கொடுத்தாலும் பின்பு பெரிய அளவில் வெற்றியை கொடுப்பார். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. அரசு தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட பலன்கள் கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் எதற்கும் பயம் கொள்ள வேண்டாம்.
மீன ராசி ஏழரை சனி காலம் 2023:
சனி பகவான் ஒவ்வொரு ராசியில் 3 காட்டமாக அமர்வது வழக்கம் அதில் 12, 1, 2 வீடுகளில் இருப்பார் அதிலும். மீன ராசிக்கு விரைய சனியாக இரண்டு ஆண்டுகள் அமர்ந்து இருப்பார் அதனால் இந்த ராசிக்கு ராஜா யோகத்தை அளிக்கிறார். மீன ராசியில் பிறந்த அரசியல்வாதிகள் இருந்தால் அவர்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார் இருந்தாலும் புதிய முயற்சிகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி மறதி ஏற்படும் அதனால் தேவையற்ற செலவுகள் வரலாம். ஆகவே கவனமும் நிதானமும் தேவை. இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி கடன் எளிதாக கிடைக்கும். பெற்றோர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.
3 ராசிக்கு 7 1/2 சனி..! மூன்று ராசியில் எந்த ராசிக்காரரை புரட்டி போடப்போகிறது தெரியுமா..?
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |