குரு புதன் ஒன்று சேர்வதால் எதிர்பாராத பண பலன்கள் கிடைக்கும் ராசிகள்..!

Guru Budhan Serkai Tamil

குரு புதன் சேர்க்கை | Guru Budhan Serkai Tamil

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும் என்பது அனைவருக்கும்  தெரியாது. அப்படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் சென்று அமர்ந்து பலன்களை அளிக்கும். ஜோதிடங்களின் படி புதன் குரு இரண்டு கிரகங்களும் மீன  ராசியில் இணைவதால் மற்ற சில ராசிகளுக்கு நற்பலன்களை அளிப்பார். அப்படி என்ன நற்பலன்கள் என்று அதனை பற்றிய விவரங்கங்களை தெரிந்துகொள்வோம் வாங்க..!

குரு புதன் சேர்க்கை:

மீன ராசி:

மீன ராசி

மீன ராசியில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. அதுவும் புதன் காலத்தில் புதன் பகவான் நற்பலன்களை தராமல் போனாலும் தற்போது புதன் குரு இரண்டும் சேர்ந்து நிகழ்ந்துள்ளது. ஆகவே மீன ராசிக்கும் இந்த காலம் நல்ல காலமாக இருக்கும். இந்த காலத்தில் நல்ல முன்னேற்றம் பணிகளில் காணப்படும். வேலை தொடர்பான பயணங்கள் காணப்படும். திருமண வாழ்க்கையில் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள். ஆகவே இந்த காலம் நல்ல காலம் ஆகும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

புதன் சேர்க்கையானது தனுசு ராசிக்கு 4 -வது வீட்டில் நிகழ்வதால் இந்த காலத்தில் பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தனுசு ராசியில் வாழ்க்கை நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய வாகனம், வீடு பொருள், மனை என வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமாக இந்த மாற்றமானது தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்⇒  மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

கன்னி ராசி:

புதன் குரு சேர்கை 7 வீட்டில் நிகழ்வதால் பெரிய நிதி நிலைமை கூட கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். மேலும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்⇒  இந்த ராசி எல்லாம் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசியாம்..! அப்போ இந்த ராசிக்காரவங்க எல்லாம் அதிர்ஷ்டக்காரவங்களா 

மிதுன ராசி:

குரு புதன் சேர்க்கையானது 10 வீட்டில் நிகழ்கிறது. தொழிலில் நல்ல வெற்றிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கல்வி, வங்கி துறையில் இருப்பவர்கள் இந்த காலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு வேலை செய்ப்பவர்களுக்கு இந்த காலம் நல்ல காலம் ஆகும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகளும் குவியும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

குரு புதன் சேர்க்கை 11 வீட்டில் நிகழ்வதால் நல்ல நிதி வளர்ச்சி இருக்கும். பேச்சு  சார்ந்த தொழிலில் இருந்தால் அவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். குரு புதன் சேர்க்கை உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். சொந்தமாக தொழில் செய்துகொண்டு இருப்பவர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படும். மேலும் நிறைய பணவரவுகள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்