திருமண யோகம் எப்போது
குரு பெயர்ச்சி ஏப்ரல் 22-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த குரு பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு திருமணம் யோகம் நடக்க இருக்கிறது. நம் வாழ்க்கையில் நடக்க கூடிய திருமணம், குழந்தை பாக்கியம் , தொழில் முன்னேற்றம் போன்றவற்றிற்கு முக்கியமாக இருப்பது குரு பகவான். இப்படி முக்கியமாக குரு பகவான் தற்போது மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு திருமணம் நடக்க போகிறது அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
இந்த ஆண்டு திருமணம் நடக்க கூடிய ராசிகள்:
மீனம் ராசி:
மீன அதிபதி குரு ராசிக்கு 2 ஆம் வீடான குடும்பம், தன ஸ்தானத்தில் குரு மாறப்போகிறார். இதனால் இந்த மாதத்திற்கு பிறகு மீனம் ராசி மற்றும் மீனம் லக்னம் உடையவர்களுக்கு திருமணம் யோகம் கைக்கூடும். இந்த ராசி மற்றும் லக்னம் உடையவர்கள் உங்கள் வீட்டில் இருந்து அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். மேலும் நல்ல வரனும் கிடைக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசியில் குரு 5 ஆம் ஸ்தானமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். குரு சஞ்சாரம் செய்வதால் திருமணத்திற்கான யோகம் கிடைக்கும். தனுசு ராசிகளுக்கு தெரிந்த நபர் வாழ்க்கை துணையாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
விருச்சிகம் ராசி:
விருச்சிக ராசிகாரர்களுக்கு குரு பகவானால் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் திருமணத்திற்காக முயற்சிப்பவர்கள் கொஞ்சம் கவனமாக வரன்களை பார்க்க வேண்டும். ஏனென்றால் சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்கு வர கூடிய துணை பகையாளியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு திருமணம் முயற்சிகள் எடுத்தால் திருமணம் சிறப்பாக நடக்கும். அடுத்த ஆண்டு வரை குரு உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்ததால் திருமணம் யோகம் இருக்கிறது. மேலும் அன்பாகவும், அக்கறையாகவும், அறிவாகவும் இருக்க கூடிய வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைப்பார்கள்.
சிம்மம்:
சிம்மம் ராசியில் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதனால் நீங்கள் இந்த ஆண்டு திருமணம் பற்றிய முயற்சிகளை எடுத்தால் உங்களுக்கு கைக்கூடும். மேலும் உங்களை புரிந்து கொண்டு அன்பாக பார்க்க கூடிய வாழ்க்கை துணை கிடைப்பார்கள்.
மேஷம்:
இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு திருமணம் கைக்கூடும். ஏனென்றால் மற்ற ராசிகளுக்கு குருவின் ஆதரவு மட்டும் தான் கிடைக்கும், ஆனால் மேஷ ராசியில் குரு அமர்ந்திருப்பதால் குருவின் பலம் அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் திருமணம் முயற்சிகளை எடுத்தால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைப்பார்.
கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |