Guru Rahu Serkai Palangal in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் இந்த நவகிரகங்களின் தாக்கம் என்பது மிகுந்த பங்கு வகிக்கின்றது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அப்படி உள்ள நவகிரகங்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தங்களின் ராசிகளை மாற்றி கொள்கின்றன இதனை பெயர்ச்சி என்பார்கள். இந்நிலையில் குருவும் ராகுவும் தங்களின் ராசிகளை மாற்றி பெயர்ச்சி அடைந்தன. அவ்வாறு பெயர்ச்சி அடைந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் சந்தித்தால் அதனை சேர்க்கை அடைந்தன என்று கூறுவார்கள்.
இந்த சேர்க்கையின் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதிலும் குறிப்பாக ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அநேக நல்லது நடக்கும். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும். இன்றைய பதிவில் இந்த குரு ராகு சேர்க்கையால் தங்களின் வாழ்க்கையில் மிகுந்த பாதிப்புகளை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் உங்கள் ராசி உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி இருந்தது என்றால் உங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புக்கள் ஏற்பட போகின்றது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
சூரியன் மற்றும் சனியின் மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகும் ராஜ யோகம்
குரு, ராகு சேர்க்கையால் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிக்காரர்கள்:
மேஷ ராசி:
மேஷ ராசியில் தான் இந்த குரு ராகு சேர்க்கை நடைபெறுவதால் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் சந்திக்காத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட உள்ளது.
அதாவது இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அநேக பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதனால் தங்களின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களும் இந்த காலகட்டத்தில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. அதாவது இந்த காலகட்டத்தில் பல வேதனைகளும் பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்யுங்கள். இல்லையெனில் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை சரிசெய்வதற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.
கடக ராசி:
இந்த குரு, ராகு சேர்க்கையால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவகையான பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தில் உங்களின் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் இந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு சிறிய தவறு செய்தாலும் அது மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவாகுக்கும். அதேபோல் பணியிடத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை மிகவும் கவனமாக செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு பணியிடத்தில் அவமானங்கள் ஏற்பட்டுவிடும்.
நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |