இந்த குரு வக்ர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையை மோசமாக மாற்றப்போகிறது

Advertisement

குரு வக்ர பெயர்ச்சி 2022 | Guru Vakra Peyarchi 2022 in Tamil

அனைத்து சகோதர சகோதரிக்கும் வணக்கம். இந்த வருடம் குரு வக்ர பெயர்ச்சி எந்த ராசியை என்ன செய்ய போகிறது என்ற பயத்தில் இருப்பீர்கள். சூரியன், சந்திரன், ராகு – கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் அதிசார, வக்ர நிலையை அடையும். அப்போது குரு மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார். அவர் அந்த ராசியில் இருந்தாலும் மற்ற கிரங்களுக்கும் பலன்களை தருவார். அதில் ஒரு சில ராசியில் கட்டத்தை கொண்டு அவரின் பார்வை நன்றாகவும் இருக்கலாம் அல்லது கெடுதலாகவும் இருக்கலாம். அதனை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

வக்ர குரு பார்வை:

இந்த வருடம் ஜூலை 29 முதல் மீன ராசியில் சஞ்சரிக்கிறார் குரு சஞ்சரிக்கிறார் ஆனாலும் அவர் பின்னோக்கி நகர உள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையையும் சில ராசிக்காரர்களுக்கு கெடுதலையும் தர உள்ளார் முக்கியமாக சில ராசிகாரர்களுக்கு திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். அது எந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும் என்பதை பற்றி தெளிவாக காண்போம்.

ஜூன் 5 சனி வக்ர பெயர்ச்சி 2022 யாருக்கு யோகம் முழு ராசிபலன் இதோ

மேஷ ராசி:

வக்ர குரு பார்வை

உங்களின் வாழ்க்கையில் தொழில் ரீதியாக நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். குருவின் வக்ர பெயர்ச்சியால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாறுகள் வந்து நீங்கும். இருவரின் தனி தனியான கருத்துக்களால் வீண் விவாதங்கள் வரும். இருவரிடையே புரிந்துணர்வு இல்லாததால் தொடர்ந்து பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. மனைவியிடத்தில் ஈகோ பார்த்து சண்டைகள் அதிகமாக மாறும்.

சிம்ம ராசிக்காரர்கள் பெரும் குழப்பம்:

சிம்ம ராசிக்காரர்கள் பெரும் குழப்பம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தனிபட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். அதுவே பெரும் குழப்பமாக மாறவும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகுவீர்கள். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பற்றிய குழப்பத்தில் அது தொடர்புடைய அலைச்சல்கள் ஏற்படும். மனைவியிடத்தில் தேவையாற்ற சண்டைகள் உண்டாகும். இதனால் இருவரிடையே கருத்து வேறுபாடுகள் வரும். குடும்பத்தில் சகஜமாக இருக்க இயலாது.

கன்னி ராசிகாரர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்:

கன்னி ராசிகாரர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள்

குரு வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலும் பிரச்சனைகள் ஏற்படும் அதேபோல் குடும்பத்தில் உள்ளவர்களிடமும். கவலையான முடிவுகளும் உருவாகும். அதில் தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் கவலை உண்டாகும் அளவுக்கு பிரச்சனைகள் உள்ளது. அதேபோல் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதனை விட்டு கொடுத்து சென்றால் தவிர்க்கலாம் ஆனால் உங்களிடம் காணப்படும் தனித்துவத்தை அதாவது ஈகோவை வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பீர்கள் அது இருவரின் உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

பண வரவிற்கும் சரிவு இருக்கும். அதனால் அனைத்து சேர்த்து உங்களிடம் ஒரு பெரிய அளவில் சரிவையும் மன ரீதியாக கவலையையும் அளிப்பார்.

துலாம் ராசிகாரர்களுக்கு தேவையற்ற பிரச்சனை:

துலாம் ராசிகாரர்களுக்கு தேவையற்ற பிரச்சனை

துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நன்மையை விட தீமைகள் விளைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்காது. சிறு சிறு பிரச்சனைகாக பெரியளவில் சண்டைகள் உருவாகி உறவில் விரிசல்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் நம்பிக்கையின்மை, பரஸ்பர புரிதல் இல்லாததால் உறவில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் முடிந்தளவு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவின் புரிதல் இணையை தவிர்க்க இயலும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement