உங்கள் பெயர் H என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா. அப்படினா இது உங்களுக்கான பதிவுதான்..!

h name characters name in tamil

H Letter Name Characters in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் H எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இந்த பதின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக ஒருவர் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களின் நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் இல்லையென்றால் அவர்களின் விரோதிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் அது உண்மையா என்று கேட்டால் நிச்சயம் அது நமக்கு தெரியாது அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மை பற்றி தெரிந்துகொள்ளவும்  வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ளவும் சில ஜோதிடர்களிடம் சென்று தெரிந்துகொள்வோம். அதேபோல் நம்மை பற்றி இன்னொரு விதமாக தெரிந்துகொள்ள முடியும் அது தான் நம்முடைய பெயரின் ஆரம்பிக்கும் முதல் எழுத்து. இந்த முதல் எழுத்தை வைத்து தெரிந்துகொள்ள முடியும் அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

H Name Characters Name in Tamil:

 h name characters name in tamil

H எழுத்தில் பெயர் கொண்டவர்கள் வேகமாக பேசக்கூடியவராக இருப்பார்கள். அதேபோல் இவர்கள் மின்னல் போல் யோசிக்கக்கூடியவராக இருப்பார்கள்.

இவர்கள் எந்த செயலை எடுத்தாலும் அந்த செயலில் அவர்களுடைய ஆற்றல் அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் யோசிக்க கூடிய விஷயத்தை கூட உணர்ந்து அதற்கு ஏற்றது போல் பதில் சொல்ல கூடிய திறமை இவர்களிடம் இருக்கும்.

அனைவரிடத்திலும் சுலபமாக பழக்கூடியவராக இருப்பார்கள். இவர்களின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை வெளிப்படையாக சொல்ல கூடிய தைரியம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

எந்த வேலையையும் இவர்களால் செய்ய முடியாமல் இருக்க கூடாது. எப்படி பட்ட வேலையாக இருந்தாலும் அதனை செய்து முடித்து காட்டுவார்கள்.

இவர்களுக்கு கோவம் அதிகமாக வரும் இதுவே இவர்களுடைய பலவீனமாக இருக்கும். இதனால் சிலவகையான நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

யாராலும் செய்யமுடியாத வேலையை செய்ய ஆர்வம் அதிகமாக இருக்கும் அதேபோல் இவர்களுக்கு தனித்துவம் நிறைந்து வேலையை செய்ய ஆசைபடுவார்கள்.

பழையதை விட புதிய புதிய விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

இவர்கள் எந்த துறைக்கு சென்றாலும் அந்த துறையில் உள்ள அனைத்து விஷயத்தை மிக விரைவில் கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பார்கள். அதேபோல் இவர்கள் எந்த துறைக்கு சென்றாலும் அந்த துறையில் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களுக்கு இன்றைய வேலையை இன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

இவர்களிடம் உதவி கேட்பதற்கு முன் அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகமாக இருக்கும்.

இவர்கள் வெற்றி பெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி அதனை இவர்கள் மனதில் சிறிது நேரம் தான் வைத்துக்கொள்வார்கள். எந்த செயலை எடுத்தாலும்  முயற்சி குறிக்கோள் வைத்து தான் செய்வார்கள்.

பணத்திற்காக அவர்களுக்கு விருப்பம் இல்லாத இடத்தில் வேலை செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு மனதில் நல்லது என்று தோன்றினால் மட்டுமே அங்கு இவர்கள் வேலை செய்வார்கள்.

பண விஷயத்தில் எந்த விஷயத்தையும் கவலை இல்லாமல் செய்வார்கள். இவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள்.

இயற்கையாகவே இவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம் உண்டு. இவர்களுக்கு இயற்கை சூழ்நிலையில் இருப்பதற்கு மிகவும் விரும்புவார்கள்.

அதேபோல் இவர்களின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை மற்றவர்களுக்கு எளிமையாக புரிய வைப்பார்கள்.

S வார்த்தையில் பெயர் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com