எந்த ஹோரையில் என்ன செய்யலாம்? | Horai in Tamil

Advertisement

ஓரை அட்டவணை 2024 | ஹோரை பலன்கள் | Horai in Tamil 

Horai in Tamil:- ஆன்மிக நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கம். இந்த பதிவில் ஹோரை பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக புதிய தொழில் தொடங்குவது முதல் அனைத்து சுபகாரியங்களுக்கும் ஹோரை பார்த்து அதன்படி நடந்துகொள்ளுமாறு நமது வீட்டு பெரியவர்கள் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். நமது முன்னோர்கள் மற்றும் சித்தர்கள் அறிவியல், வானவியல் மற்றும் ஜோதிடம் ஆகிய விஷயங்களில் சிறந்து விளங்கினார்கள். அதாவது அவர்கள் ஒரு நாளில் இருக்கின்ற நாளிகைகளில் நேரங்களை கூட மிக துல்லியமாக குறித்து எந்த நேரத்தில் என்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்று மிக துல்லியமாக குறித்து வைத்துள்ளார்கள்.

சரி இந்த பதிவில் ஹோரை என்றால் என்ன? எத்தனை ஹோரை இருக்கிறது? எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்? என்ற ஆன்மிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஹோரை அறிந்து நடந்துகொள்ளும் ஒருவரை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்களின் வாக்கு, அப்படிபட்ட ஹோரை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

இன்றைய ஹோரை நேரம் தமிழில்

ஹோரை என்றால் என்ன?

ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள நேரமாகும். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசையாக மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே ஹோரை நேரங்கள் வரும். காலையில் சூரிய உதயம் ஆன முதல், அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஹோரை தொடங்கும்.

Horai Timings in Tamil 2024:

ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.

உதாரணத்திற்கு: ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய அதிபதி சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும்.

சுப ஹோரை | Suba Orai:

7 ஹோரைகளில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் செய்யலாம். அதே போல் வளர்பிறையில் சந்திர ஹோரையையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

newஇன்றைய ராசி பலன்கள் 2024

எந்த ஹோரையில் என்ன செய்யலாம்? | ஹோரை பலன்கள்

சூரிய ஹோரை பலன்கள் – Suriya Horai Palangal:-

சூரிய ஹோரையில் என்ன காரியங்கள் செய்தால் நன்மையில் முடியும்..? சூரிய ஹோரையில் உயில் எழுத, வீடு, வாகனம் பதிவு செய்ய, அரசு சம்மந்தப்பட்ட காரியங்களை செய்ய, வழக்கு தொடர்பான விஷங்களை முயற்சிக்க, மேலதிகாரிகளை சந்திக்க இந்த சூரிய ஹோரையில் செய்யலாம். ஆனால் புதிதாக எந்த அலுவல்களையோ ஒப்பந்தங்களையோ செய்வது நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் சூரிய ஹோரை நேரத்தில் வீடு குடி போகக் கூடாது.

சுக்கிர ஹோரை – Sukra Horai in Tamil:-

சுக்கிர ஹோரையில் என்ன காரியங்களை செய்தால் நன்மையில் முடியும்? இந்த சுக்கிர ஹோரையில் பெண்கள் சம்மந்தப்பட்ட அனைத்து காரியங்களையும் செய்ய ஏற்ற ஹோரை. அதேபோல் எல்லாவிதமான நல்ல காரியங்களை செய்யவும் இந்த சுக்கிர ஹோரையை பயன்படுத்தலாம். வீடு, நிலம், வாகனம், ஆடை, விலை உயர்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் வாங்கினால் நன்மையில் முடியும். விவசாயம், பயணம், பணம் பரிமாற்றம் போன்ற காரியங்களை செய்ய இந்த சுக்கிர ஹோரை ஏற்றது.

புதன் ஹோரையில் என்ன செய்யலாம் – Puthan Horai in Tamil:-

புதன் ஹோரையில் என்னென்ன விஷயங்களை செய்தால் நன்மையில் முடியும். சாகசங்கள் சம்மந்தப்பட்ட அனைத்து செயல்களையும் செய்ய இந்த புதன் ஹோரை மிகவும் ஏற்றது.  கல்வி கடவுளாக புதன் இருப்பதால் கல்வி மற்றும் எழுத்து சம்மந்தப்பட்ட விஷயங்களை செய்தால் அந்த விஷயத்தில் தாங்கள் வெற்றி அடைவீர்கள். இந்த புதன் ஹோரையிலும் சுப காரியங்களை செய்யலாம். நேர்மையாக செய்யும் எந்த காரியங்களை பற்றி பேசவும், முடிவெடுக்கவும் இந்த புதன் ஹோரை நேரம் உகந்தது. தங்களின் பயணங்களை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம்.

சந்திர ஹோரையில் என்ன செய்யலாம்:-

சந்திர ஹோரையில் என்னென்ன விஷயங்களை செய்யலாம். வளர்பிறை நாட்களில் சந்திர ஹோரையும் நல்ல ஹோரை என்று சொல்லப்படுகிறது. இந்த சந்திர ஹோரையில் கல்யாணம், வளைகாப்பு, பெண் பார்ப்பது, குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துவது, வேலைக்கு விண்ணப்பிப்பது, பதவி ஏற்பது, வங்கி கணக்கை தொடங்குவது ஆகிய காரியங்களை செய்ய ஏற்ற நாள். அதேபோல் பெண்கள் சம்மந்தப்பட்ட காரியங்களை செய்ய நல்ல நாள். தொழில் சம்மந்தமாகவோ அல்லது ஏதாவது புதிய யாத்திரையை மேற்கொள்வதற்கோ இந்த சந்திர ஹோரை மிகவும் ஏற்றது.

சனி ஹோரையில் என்ன செய்யலாம்:-

சனி ஹோரையில் என்ன காரியங்களை செய்தால் நன்மையில் முடியும்? இந்த சனி ஹோரையில் ஒரு சில காரியங்களை செய்தால் அது தன்மையில் முடிவடையும். அதாவது பூர்வ ஜென்ம பாவங்களை தீர்க்க, பாத யாத்திரை செல்ல, நடைபயணம் துவங்க, விருட்சங்கள் அமைக்க, மரக்கன்று நடுதல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது ஆகிய காரியங்களை செய்வதற்கு இந்த சனி ஹோரை ஏற்றது. அதே போல் சனி ஹோரையில் தங்களுடைய கடனை அடைத்தால் தாங்கள் மீண்டும் மற்றவர்களிடம் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என்பது ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஆகவே தங்களது கடனை அடைப்பதாக இருந்தால் சனி ஹோரை காலங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.

குரு ஹோரை:-

குரு ஹோரை காலத்தில் என்னென்ன விஷயங்களை செய்தால் நன்மையில் முடியும். இந்த குரு ஹோரையில் அனைத்து வகையான சுப நிகழ்ச்சிகளையும் செய்யலாம். வியாபரம், விவசாயம் சார்ந்த அனைத்து செயல்களையும் செய்ய இந்த குரு ஹோரை ஏற்றது. மேலும் ஆடை ஆபரணங்கள் வாங்க, வீடு மனை வாங்க அல்லது விற்க மிகவும் ஏற்ற ஹோரை. இந்த குரு ஹோரையில் நேர்மையற்ற காரியங்களை செய்வதாக இருந்தால் அதனை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

செவ்வாய் ஹோரை:-

செவ்வாய் ஹோரையில் எந்த காரியங்கள் செய்யலாம்? எந்த காரியங்களை செய்ய கூடாது? இந்த செவ்வாய் ஹோரையில் புதிதாக எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருப்பதே நல்லது. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம். மேலும் செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, ஒப்பந்தம் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைக்கு தீர்வு காண, சொத்து பிரித்தல், உயில் எழுத, ரத்த தானம் செய்ய, உறுப்பு தானம் செய்ய, மருத்துவ உதவிகள் செய்ய இது போன்ற காரியங்களை மேற்கொண்டால் நன்மையில் முடியும்.

சுப ஹோரைகள்

சுப, அசுப ஹோரைகள்:

குரு சுக்கிரன், சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள் சுப ஹோரைகள் என்றும், செவ்வாய், சனி, கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை சந்திர ஹோரை முதலியன அசுப ஹோரைகள் என கருதப்படுகின்றன. சரி கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எந்த கிழமையில் எந்த ஹோரை பலன் தராது என்பது பார்க்கலாம்  வாங்க.

கிழமை சுப ஹோரை
ஞாயிறு கிழமைகளில் சனி, சுக்கிர ஹோரைகள் பலன் தராது.
திங்கள் கிழமைகளில் சனி ஹோரை பலன் தராது.
செவ்வாய்க் கிழமைகளில் சனி, புதன் ஹோரை பலன் தராது.
புதன் கிழமைகளில் குரு, சந்திர ஹோரை பலன் தராது.
வியாழக் கிழமைகளில் சுக்கிரன், புதன் ஹோரை பலன் தராது.
வெள்ளிக் கிழமைகளில் குரு, சூரிய ஹோரை பலன் தராது.
சனிக்கிழமைகளில் சூரியன், சந்திரன் சனி ஹோரை பலன் தராது.

எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ஹோரை யோகம் தரும் | Horai Palangal in Tamil 2024

மேஷம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

மேஷம் ராசிக்காரர்களுக்கு பொதுவான விஷயங்களுக்கு சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகள் நல்ல பலன் தரும்.

  1. சுபநிகழ்ச்சிகள், சொத்து மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களுக்கு செவ்வாய் மற்றும் குரு ஹோரைகள் நல்ல பலன் கொடுக்கும்.
  2. பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு சுக்கிரன் ஹோரை நல்லது.
  3. கல்வி சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு சந்திர ஹோரை நல்ல பலன் தரும்.
  4. தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு செவ்வாய், புதன், குரு ஹோரைகள் நன்மையான பலன்களை கொடுக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரை:

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொதுவாக சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஹோரைகள் அமோக பலன்களை கொடுக்கும்.

  1. அதாவது சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் செய்தால் நல்ல பலன் கொடுக்கும்.
  2. புதிய வீடு, ஆடை ஆபரணங்கள், மனை சார்ந்த விஷயங்களை வாங்க சுக்கிரன் ஹோரை நல்ல பலன் தரும்.
  3. அதேபோல் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சுக்கிரன் ஹோரையில் அதற்கான சிகிச்சை முறையை மேற்கொண்டால் அந்த ஆரோக்கிய பிரச்சனை விரைவில் குணமடையும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

மிதுனம் ராசிக்காரர்களுக்கும் பொதுவாக சந்திரன், புதன் குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகள் நல்ல யோகங்களை தரும்.

  1. அதாவது தங்களது புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு கல்வி, தொழில், மனை வாங்க, வீடு கட்ட, உத்யோகம் செல்வதற்கு புதன் ஹோரை உகந்தது.
  2. அதேபோல் தங்களுடைய சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் தொடங்கினால் அல்லது செய்தால் அந்த காரியம் நல்லபடியாக முடிவடையும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

பொதுவாக கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகள் நல்ல பலன்களை கொடுக்கும்.

  1. கடகம் ராசிக்காரர்கள் சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கு குரு ஹோரை நல்ல பலன்களை அளிக்கும்.
  2. கல்வி, உத்யோகம், பூமி சம்பந்தமான காரியங்கள், வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிரன் ஹோரை நன்மைகளை தரும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரை:-

பொதுவாக சிம்மம் ராசிக்காரர்களுக்கு சூரியன், சந்திரன், குரு ஹோரைகள் நல்ல பலன் கொடுக்கும்.

  1. சொத்து சார்ந்த விஷயங்களுக்கு செவ்வாய் ஹோரை சிறப்பான பலன்களை கொடுக்கும்.
  2. அரசாங்கம் சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை சிம்மம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரை:-

பொதுவான விஷயங்களுக்கு  சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிர போன்ற ஹோரைகள் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்த ஹோரைகள் ஆகும்.

  1. சொத்து சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிரன் ஹோரையில் நல்ல முடிவுகளை எடுக்கலாம்.
  2. புதன் ஹோரையில் அரசு சார்ந்த விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. குரு ஹோரையில் சுபகாரியங்களை செய்ய உகந்த ஹோரையாகும்.
  4. சுக்கிரன் ஹோரையில் பணம் சார்ந்த விஷயங்களை செய்வதற்கு உகந்த ஹோரையாகும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிர ஹோரையில் தங்களுடைய பொதுவான விஷயங்களை செய்வதற்கு மிகவும் உகந்த ஹோரையாகும்.

  1. செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்கள், சொத்து மற்றும் அரசாங்கம் சார்ந்த காரியங்களை செய்வதற்கு மிகவும் உகந்த ஹோரையாகும்.
  2. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திரன் ஹோரை உகந்த ஹோரையாகும்.
  3. கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிரன் ஹோரை சிறந்தது.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

விருச்சிகம் ராசிக்காரர்கள் சந்திரன், குரு, சுக்கிரன் ஹோரையில் தங்களுடைய பொதுவான விஷயங்களை செய்வதற்கு மிகவும் உகந்த ஹோரையாகும்.

  1. கல்வி, வேலை, பூமி சம்பந்தமான காரியங்கள், வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்தையும் சுக்கிர ஹோரையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  2. குரு ஹோரையில் சுபகாரியங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு, சுக்கிர ஆகிய ஹோரைகள் பொதுவான விஷயங்களுக்கு இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

  1. குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த விஷயங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.
  2. சுக்கிர ஹோரையில் பணம் சார்ந்த விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நல்ல பலன் கிடைக்கும்.
  4. தொழில் சார்ந்த விஷயங்களுக்கு செவ்வாய், குரு ஹோரைகள் உகந்தது.

மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிர ஆகிய ஹோரைகள் பொதுவான விஷயங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.

  1. சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த விஷயங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.
  2. பணம் சார்ந்த விஷயங்களுக்கும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரை நன்மை தரும்.
  3. தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய், சுக்கிரன் ஹோரைகள் உத்தமம்.
  4. குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நல்ல பலன் கொடுக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிர ஹோரைகள் பொதுவான விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  1. சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த விஷயங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.
  2. பணம் சார்ந்த விஷயங்களுக்கும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரை உகந்தது.
  3. தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய், சுக்கிரன் ஹோரைகள் உகந்தது.
  4. குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மை தரும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு உகந்த ஹோரைகள்:-

மீனம் ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு, சுக்கிர ஆகிய ஹோரைகளில் பொதுவான விஷயங்களை செய்தால் நல்ல கொடுக்கும்.

  1. குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த விஷயங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.
  2. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும்.
  3. தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய், புதன், குரு ஹோரைகள் உகந்தது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்
Advertisement