வீட்டில் நிம்மதி & பணம் நிலைத்திருக்க இந்த 1 படத்தை வாங்கி மாட்டுங்க போதும்

Advertisement

Horse Astrology in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் ஆன்மிக பதிவில் ஒரு அருமையான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது நமது வீட்டில் நிம்மதி மற்றும் பணம் வரவு அதிகரிக்க அனைவருமே விரும்புவோம். இருந்தாலும் நமது வீட்டில் பணமோ, நிம்மதியோ நிலைத்திருப்பது இல்லை. அதற்கு முக்கிய காரணம் நமது வீட்டில் நேர்மறை ஆற்றல் குறைவாக இருப்பது தான். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள். அப்படி எதுவும் செய்ததில்லை என்றால் ஒன்றும் தவறில்லை, இனியாவது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க சில விஷயங்களை கடைபிடியுங்கள். அவற்றில் ஒன்று தான் குதிரை படம். நமது வீட்டில் குதிரை படம் வைத்தோம் என்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் நிம்மதி மற்றும் பணம் வரவு அதிகரிக்கும். இருப்பினும் வீட்டில் குதிரை படம் வைப்பதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது அதனை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

குதிரை:

பொதுவாக நம்மை சுற்றி பாசிட்டிவான பொருட்கள் இருந்தால், அந்த பாசிட்டிவான பொருளில் இருந்து நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குமாம். மேலும் நாம் இருக்கும் இடத்தை சுற்றியும் பாசிட்டிவ் சக்தி இருக்கும். அந்த பாசிட்டிவான பொருள்களில் ஒன்று தான் குதிரை. இந்த குதிரை பாசிட்டிவ் சக்தி கொண்ட ஒரு விலங்காக கருதப்படுகிறது. மேலும் குதிரை வாஸ்து சாஸ்திரம் படி நல்ல ஆற்றல் வாய்ந்த விலங்காக கருதப்டுகிறது வெற்றியை குறிக்கும் விலங்காக சொல்லப்படுகிறது.

இத்தகைய குதிரை படங்களை நமது வீட்டில், அலுவலகங்களில், தொழில் நடத்தும் இடம் போன்றவற்றில் வைப்பதினால் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

குதிரை வேகத்தின் அடையாளமாக கருதப்படுவதால் நமது வீட்டில் வைக்கும் பொழுது நமது பொருளாதார நிதிநிலை வளர்ச்சியும் மிக வேகமாக வளர்ச்சியடையும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள்..!

எந்த மாதிரியான குதிரை படத்தை வீட்டில் வைக்க வேண்டும்?

ஒற்றைப்படை எண்கள் கொண்ட குதிரை படங்களை வீட்டில் வைக்கலாம்.

குறிப்பாக 7 குதிரை கொண்ட படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ரொம்ப விசேஷமான ஒன்று என்று சொல்லலாம்.

குதிரை ஓடுவது போல் உள்ள படத்தை தான் வீட்டில் மாட்ட வேண்டும், நடப்பது போல் அல்லது நிற்பது போல் உள்ள படங்களை கண்டிப்பாக வீட்டில் மாட்டக்கூடாது.

அதேபோல் குதிரை ஒரே திசையை நோக்கி ஓடுவது போல் உள்ள படங்களை தான் வீட்டில் மாட்ட வேண்டும்.

குதிரை ஆக்ரோஷமாகவோ, கோவமாகவோ உள்ள படங்களை வீட்டில் மாட்ட கூடாது. சாந்தமாக உள்ள குதிரை படங்களை தான் வீட்டில் மாட்ட வேண்டும்.

எங்கு குதிரை படத்தை மாட்ட வேண்டும்?

இந்த குதிரை படத்தை வீடு, அலுவலகம், தொழில் செய்யும் அனைத்து இடங்களிலும் வைக்கலாம்.

எங்கு குதிரை படத்தை வைக்க கூடாது?

  • வீட்டு வாசலுக்கு நேராக குதிரை படத்தை மாட்ட கூடாது.
  • சமையலறை பக்கத்தில் வைக்க கூடாது.
  • பாத்ரூம் பக்கத்திலும் குதிரை படத்தை வைக்க கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
வீட்டில் பணம் சேர இந்த 5 விஷயத்தை மட்டும் செய்யுங்கள்..!

குதிரை படம் மாட்ட சரியான இடம் எது?

குதிரை படத்தை தெற்கு திசையில் உள்ள சுவற்றில் மாட்டி வைக்கலாம். இப்படி மாட்டி வைப்பது மிகவும் நல்ல பலன்களை தரும். ஒரு வேளை உங்களால் தெற்கு திசையில் குதிரை படம் மாட்ட இடம் இல்லை என்றால் கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் மாட்டி வைக்கலாம்.

செல்வத்திற்கு அடையாளமாக கருதப்படும் இந்த குதிரை படத்தை நமது வீட்டில் மாட்டிவைத்து தினமும் பார்த்து வந்தோம் என்றால் நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் மேலும் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். அதேபோல் நமக்கு சிந்தனைகள் அதிகரிக்கும், சுறுசுறுப்பாகவும் இருப்போம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement