கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் உங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

virucahaga raasi ketai natchathiram in tamil

கேட்டை நட்சத்திரம் பெண்

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணாக இருந்தால் உங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி இன்றைய ஆன்மீக பதிவில் பார்க்கப்போகிறோம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டையை அடைவார்கள் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லால் இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு  நடக்க போகும் திருமணம் காதல் திருமணமா அல்லது வீட்டில் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். திருமணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி எதிர்பார்ப்புகள் இருக்கும் கேட்டை நட்சத்திர பெண்களின் திருமண வாழ்க்கையை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கேட்டை நட்சத்திரம் பெண் திருமண வாழ்க்கை:

இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது இடத்தில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கோட்டையை அடைவார்கள் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இது ஒரு பெண் நட்சத்திரம் ஆகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல குண அதிசியங்கள் ஏராளமாக இருக்கும். நீங்கள் புத்திசாலி மற்றும் பொறுமைசாலியாக இருப்பீர்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் கேது திசையிலோ அல்லது சுக்கிரன் திசையிலோ  திருமண வயது நடந்து கொண்டிருக்கும். அந்த வயதின் போது தான் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு உத்தமத்தில் உள்ள கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம் இதுபோன்ற நட்சத்திரங்கள் உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

அதுபோல பரணி, ரோகிணி, பூரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி இந்த ராசியில் உள்ள ஆண்ககளையும் திருமணம் செய்து கொண்டால் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

உங்களுடைய வருங்கால கணவர் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பவராக இருப்பார்.

உங்களுடைய மனதிற்கு பிடித்த மாதிரியான நபரை திருமணம் செய்தும் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் திருமணமும் நடக்க வாய்ப்பு இருக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மீது உங்களுடைய  கணவர் மிகவும் அன்புடனும், பாசத்துடனும் இருப்பார்கள்.

உங்களுடைய கணவர் உங்கள் மீது கோபப்பட மாட்டார். மற்றவர்களிடம் உங்களை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கூட உங்களின் பேச்சை கேட்டு நடப்பார்.

திருமணத்திற்க்கு பிறகு உங்களுடைய கணவர் குடும்பத்தினர் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டு பூர்த்தி செய்வீர்கள்.

அதுமட்டுமில்லாமல் உங்களுடைய அம்மா, அப்பா மீது உங்கள் கணவர் அதிகம் பாசம் காட்டுபவராகவும் இருப்பார்.

திருமணத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான வாழ்க்கை அமையும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்