How to Improve Cash Flow Astrology in Tamil
ஒரு சிலருக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. அதற்கு காரணம் அவர்கள் பாட்டி , தாத்தா போன்றவர்கள் அதிகம் சொத்துக்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு பணம் பெரியதாக தெரியாது. ஆனால் ஏழையாக உள்ளவர்களுக்கு பணம் பெரியதாக தெரியும். அந்த வகையில் ஏழையாக உள்ளவர்கள் சம்பாதிக்கும் பணத்தை எந்த விதத்தில் பண வரவை அதிகரிக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் படியுங்கள்⇒ பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..
செந்தாமரை மகாலட்சுமி :
நம்முடைய வீட்டில் எத்தனையோ கடவுள் படங்கள் வைத்து வழிபாடுகள் செய்தாலும், நம் மனதிற்கு பிடித்த குல தெய்வம் போன்ற தெய்வத்தை வழிபாடு செய்து வருகிறோம். ஆனாலும் செந்தாமரையில் அமர்ந்து உள்ள லட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
முன்னோர்கள் காலத்தில் இருந்து செந்தாமரையில் அமர்ந்து இருக்கும் கடவுளான லட்சுமி தேவியை வழிபட்டு வருகிறார்கள். அதிலும் தாமரையில் உள்ள லட்சுமியை வழிபடுவதால் பல வகையான செல்வம் வந்து குவியும். வெள்ளிக்கிழமை மற்றும் ஏகாதசி போன்ற தினத்தில் தாமரை பூவினை வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு வைத்து வழிபடுவதனால் பண வரவு அதிகரிக்கும்.
கோவிலில் மகாலட்சுமிக்கு தாமரை மலர்களை கொடுத்து, சாமி பாதத்தில் வைத்து வாங்கி கொள்ள வேண்டும். இதனை பச்சை நிற துணியில் வைத்து சுற்றி அதனை பெட்டியில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.
உங்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!
சங்கடம் தீர்க்கும் விநாயகர்:
விநாயகரை வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும். நம் மனதில் உள்ள சங்கடத்தை தீர்ப்பது மட்டுமல்லாமல் பண வரவு அதிகரிக்கும் கடவுளாக விநாயகர் இருக்கிறார்.
கற்பக விநாயகருக்கு 1008 அருகம்புல் மாலையை சாற்றினால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். விநாயகரை வெள்ளிக்கிழமை வழிபடுவதன் மூலம் பண வரவு அதிகரிக்கும். அதிலும் 11 அகல் விளக்கு ஏற்றி 11 முறை சுற்றி வருவதால் செல்வம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் கடன் பிரச்சனைகள் நீங்கும்.
விநாயகருக்கும் செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வந்தால் நினைத்த காரியம் கைக்கூடும். அதிலும் தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
காமாட்சி விளக்கு :
அனைவரது வீட்டிலும் காமாட்சி விளக்கை வைத்து வழிபட்டு வருகிறார்கள். அதில் டைமண்ட் கற்களை வைத்து வழிபடுவதால் கடவுளின் அருள் கிடைத்து செல்வம் பெருகும். வீட்டில் குபேர பூஜை செய்து வருவதன் மூலம் செல்வ வளத்தை அதிகரிக்கலாம். வெள்ளிக்கிழமையில் பௌர்ணமி நாளில் காலை நேரத்தில் குபேர சிலைக்கு பூஜை செய்து வர பணவரவு தடைகள் இல்லாமல் இருக்கும்.
கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..
வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதன் பயன்கள்:
பூஜை அறையை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதிலும் நமது வீடு சுத்தமாக இருந்தால் தான் தெய்வம் வீட்டிற்கு வரும். அப்படி செய்வதால் செல்வம் பெருகும்.
நமது வீட்டிற்கு வந்தாலே துர்நாற்றம் இல்லாமல் நல்ல வாசனையாக இருக்கிறதோ அந்த வீட்டில் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையில் சூடம், சாம்பிராணி அல்லது பன்னீர் தெளிப்பது போன்றவை செய்வதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஆந்தை படத்தை தொடர்ந்து பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |