நமக்கு வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டிய உணர்த்தும் 5 அறிகுறிகள்..!

Advertisement

நமக்கு வரவிருக்கும் ஆபத்துகளுக்கான 5 அறிகுறிகள் | How to Know we Have a Problem in Tamil 

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் ஆன்மிக சாஸ்த்திரம் படி நமக்கு வரவிருக்கும் ஆபத்துகளை முன்கூட்டியே நமக்கு தெரியப்படுத்தும் ஐந்து அறிகுறிகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். உங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது என்றால் நீங்கள் அனைத்து விஷயங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இறுக்கங்கள். அப்படி எச்சரிக்கையாக இருக்கும் போது நமக்கு வரவிருக்கும் ஆபத்துகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். சரி வாங்க நமக்கு ஆபத்து வரப்போவதை உணர்த்தும் 5 அறிகுறிகள் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

முதல் அறிகுறி:

உங்கள் வீட்டில் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடும். அதாவது நீங்கள் பூஜை அறையில் பூஜை செய்துகொண்டிருக்கும் போதோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி நினைக்கும்போது அல்லது நீங்கள் தனிமையில் இருக்கும்போதோ உங்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டல் ஆபத்து வரபோவதற்க்கான அறிகுறிகளில் ஒன்றாகும். அதாவது அசுப விரைய செலவுகள் ஏற்படும் அன்று என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ஆக இதனை மனதில் கொண்டு கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

அசுப விரைய செலவுகள்:

அசுப விரைய செலவு என்பது உடல் னால கோளாறுகளினால் ஏற்படக்கூடிய விரைய செலவு. விபத்துகள், மற்றவர்களுக்கு கொடுத்த பணம் வராமல் இருப்பது என்று இது போன்று உங்கள் செல்வத்தை இழக்கக்கூடிய விரைய செலவுகள் உண்டாகும்.

இரண்டாவது அறிகுறி:

பந்தல் போட்டு விளையக்கூடிய காய்கறிகளை உங்கள் கனவில் கண்டாலும் விரைய செலவுகள் ஏற்படும். ஆக விரைய செலவு ஏற்பட்டு உங்கள் பொருளையோ அல்லது பணத்தையோ இல்ல கூடிய சூழ்நிலை உருவாகும். நாம் காணும் கனவுகளில் எப்பொழுது கொடிகளில் காய்க்கக்கூடிய காய்கறிகளை மட்டும் கனவில் காணக்கூடாது.

மூன்றாவது அறிகுறி:

உங்களது கனவில் மருத்துவமனை பற்றியோ அல்லது யாருக்காவது உடல் நலக்குறைவாக உள்ளது போல் கனவு கண்டால். உங்களுக்கோ அல்லது உங்கள் இரத்தம் சார்ந்த உறவுகளுக்கு மிக பெரிய அளவில் மருத்துவ செலவு ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் விரைய செலவுகள் உண்டாகும். ஆக இந்த கனவை நீங்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நான்வது அறிகுறி:

அதேபோல் உங்கள் கனவில் மிகப்பெரிய அழிவுகளை கனவில் கண்டாலும் அது உங்களுக்கு விரைய செலவுகளை ஏற்படுத்தும். அதாவது போர் நடப்பது போல், உலகம் அலைவது போல் இது போன்று அழிவு சார்ந்த கனவுகளை கண்டால் அது மிக பெறிய விரைய செலவுகளை ஏற்படுத்தும்.

ஐந்தாவது அறிகுறி:

உங்கள் வீட்டில் உள்ள அடுப்பில் புனை உறங்குவது போல் கனவு கண்டால் வீண் விரைய செலவுகள் ஏற்போடும். அது மருத்துவமாகவும் இருக்கலாம், திருட்டதாகவும் இருக்கலாம், பொருள் இழப்பாக இருக்கலாம் இது போன்று ஏதேனும் ஒரு வழியில் விரைய செலவுகளை ஏற்படுத்தும்.

பரிகாரம்:

இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் அதனை அலட்சியம் செய்யாமல் இந்த பரிகாரத்தை உடனே செய்துவிடுங்கள். வெங்கடாஜலபதிக்கு சந்தனம் அபிஷேகம் செய்து உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகளிலில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். அல்லது பைரவருக்கு எல் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement