மாடு அழுவது நல்லதா?
நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இன்று ஒரு புதிய தகவலோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவரின் வீட்டிலும் எதாவது ஒரு செல்லப்பிராணி வளர்ப்பது வழக்கம். சிலர் வீட்டில் வளர்க்க மாட்டிர்கள். அது இப்போது முக்கியம் அல்ல? அதிகளவு விட்டில்களில் இருப்பது மாடு ஆடு நாய் தான். இதனை விட்டியிருக்கும் ஒருவராக பார்ப்பார்கள். இதில் இருக்கும் இரண்டு செல்ல பிராணிகளை பற்றி தான் இந்த பதிவு வாங்க அது என்னவென்று தெரிந்துகொள்வோம்..!
இரவில் நாய் அழுதால்:
அதிகளவு வீட்டில் வளர்ப்பது நாய் தான். என்ன தான் வீட்டில் நாய் வளர்த்தாலும் அது ஊளையிடும் போதும், அது சத்தம் இடும் போதும் ஒருவிதமான பயம் இருக்கும் இருந்தாலும் அது கத்துவதை நிறுத்த சொல்லுவோம். ஆனால் நம் வீட்டிலிருக்கும் நாய்கள் இரவு நேரங்களில் நாய் அழுகும். அந்த சத்தத்தை கேட்க மிகவும் பயமாக இருக்கும்.
நாய் அழுதால் என்ன பலன்?
நாய் இரவு நேரங்களில் அழுவது ஏன் தெரியுமா? ஒருவர் வீட்டில் வளர்க்கும் நாய் மனிதர்களை விட நன்றி வாய்ந்தது. ஏனென்றால் நம் 2 தெருக்களுக்கு முன் வரும்பொழுதே வீட்டை சுற்றி அது நுகர்ந்து பார்க்க ஆரம்பித்து விடும். அதேபோல் நாம் வீட்டிற்கு வந்த உடன் நம் மீது விழுந்து பாசத்தைகாமிக்கும். அந்த அளவிற்கு அன்பு உள்ளது.
அதேபோல் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றாலும் அதனுடைய மாற்றமும் அதிகமாக இருக்கும். அவ்வாறு அவருக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை முன்கூட்டியே நமக்கு அதனுடைய பாணியில் சொல்லும்.
அதேபோல் வீட்டிலிருக்கும் நாய்கள் இரவில் அழுதால் அந்த வீட்டில் உள்ளவருக்கு மட்டும் கெட்டது நடக்கும் என்று ஒன்றும் கிடையாது. பொதுவாக நாய்களுக்கு மனிதன் கண்ணுக்கு தெரியாத விஷயங்கள் கூட நாய்களுக்கு தெரியும். அதனால் நாய் எந்த திசையை நோக்கி அழுகிறதோ அந்த திசையில் இருப்பவர்களில் யாரோ ஒருவருக்கு என்னவோ நடக்க போகிறது என்று அர்த்தம்.நாய் நாம் வெளியில் செல்லும் போது நம்மை குரைத்து, தடுத்தது என்றால் நாம் செய்ய போகும் செயலில் ஏதுனும் தவறுகளும், போகும் வழியில் திருடர்கள், அல்லது பொருட்களை துளைக்கும் ஆபத்தும் ஏற்படும் என்று அர்த்தம்.
அதேபோல் நாய் நம்முடைய காலை வெளியில் செல்லும் போது நக்கினால் போகும் காரியம் தடைப்படும்.
அதேபோல் போகும் போது ஏதாவது கயிறை கவ்விக்கொண்டு வந்தால் போகும் காரியம் வெற்றியடையும்.
நாயின் கண்களுக்கு எமன் தெரிவார். அதனால் நமக்கு ஏதேனும் பிரச்சனை வருவது போல் இருந்தால் அதனை நமக்கு சொல்லும் விதமாக இரவு நேரங்களில் அழுகிறது.
அதேபோல் தான் மாடும் இரவு நேரங்களில் அழுதால் வீட்டிற்கு நல்லது அல்லது அதேபோல் வீட்டில் இருப்பவர்களுக்கும் அல்லது அது அழும் திசையில் உள்ளவர்களுக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்.
வாகனங்களில் போகும் பொழுது நாய்கள் துரத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |