Jupiter Rise in Aries these Zodiac Signs get more Benefits in Tamil
பொதுவாக நமது சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகம் எது என்றால் அது வியாழன் தான். இதனை தான் ஜோதிடத்தில் குரு பகவான் என்று அழைப்பார்கள். குரு பகவான் மிகவும் மங்களகரமான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார். குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். இப்படிப்பட்ட மகத்துவமான சக்திகளை தனக்குள் அடக்கி வைத்துள்ள குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார்.
அவர் மேஷ ராசிக்குள் நுழையும் போதே அஸ்தமன நிலையில் இருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு மேஷ ராசியில் உதயமாகவுள்ளார். இந்த குரு பகவானின் உதயத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நன்மைகள் நடக்கும். ஆனால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மட்டும் அதிர்ஷ்ட மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது. அது எந்தெந்த ராசிகள் என்பதை பற்றியும் அதில் உங்கள் ராசி உள்ளதா என்பதையும் இன்றைய பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குரு உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் 5 ராசிக்காரர்கள்:
கடகம்:
கடக ராசியின் 10 வது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் பணிபுரிபவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக பதவி உயர்வு, உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் போன்றவை கிடைக்கும். மேலும் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மேலும் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அதாவது நீங்கள் செய்யும் தொழில் அதிக லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் தொகை திரும்ப கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியின் 9 வது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் தொழில் ரீதியாக நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலனும் கிடைக்கும். அதாவது நீங்கள் செய்யும் தொழில் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு முன்னேற்றமும் ஏற்படும். மாறாக நஷ்டமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதனால் நீங்கள் செய்யும் தொழில் அதிக கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரர்களிடம் இருந்து நல்ல அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களால் நீங்கள் நல்ல பலன்களையே பெறுவீர்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் தைரியசாலியாம் இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க
தனுசு:
தனுசு ராசியின் 5 வது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் உங்களின் குழந்தைகளின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் தங்களின் வேலையில் திருப்தி, உங்கள் திறமைக்கான அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை பெறுவீர்கள்.
தொழில் செய்பவர்கள் தங்களின் தொழில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பெறுவீர்கள். மேலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் இக்காலத்தில் அதிகமாக இருக்கும்.
மேஷம்:
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகியுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரார்களின் ஆதரவு மிகவும் அதிகமாக கிடைக்கும்.
இதனால் உங்களின் திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்வையும் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது
மிதுனம்:
மிதுன ராசியில் 11 வது வீட்டில் குரு உதயமாகியுள்ளார். அதனால் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் மரியாதையும், நற்பெயரும் அதிக அளவில் கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் அதிக லாபமும், முன்னேற்றமும் கிடைக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ சூரியனின் அருள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் தமிழ் புத்தாண்டில் இருந்து அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |