கால் விரல் ஜோதிடம் | Kaal Viral Palan in Tamil

Advertisement

கால் விரல் பலன்கள் | Kaal Viral Josiyam

Kaal Viral Josiyam – வணக்கம் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கால் விரல் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம். ஜோதிடம் பார்த்து ஒருவருடைய குணம் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிய முடியுமோ அதேபோல், ஒருவருடைய உடல் அமைப்பை வைத்தும் அவர்களுடைய குணாதிசயங்களை நாம் அறிய முடியும். மனிதர்களின் அங்கங்களை வைத்து அவர்களுடைய அமைப்புகளுக்கு ஏற்ப பலன்களை குறித்து சொல்லுவது தான் சாமுத்திரிகா லட்சணம் ஆகும். சாமுத்திரிகா லட்சணம் பற்றி சித்தர்கள் நிறைய குறிப்புகள் எழுதியுள்ளனர் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது ஒருவருடைய கால் விரலை பார்த்து அவர்கள் எப்படிப்பட்ட குணங்களை கொண்டவர் என்று படித்தறியலாம் வாங்க.

முதல் வகை:

kaal viral josiyam

மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இது போன்று கால் விரல் உள்ளவர்கள் அனைவருடனும் எளிதாக பழகுவார்கள். எளிதில் அனைவருடனும் நட்பாகிவிடுவார்கள். இவர்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல் மிக கடினமானவர்களை கூட மிக எளிதாக சமாளித்துவிடுவார்கள். மேலும் இவர் நல்ல கலை நயம் உள்ளவர்களாகவும், நல்ல ரசனை உள்ளவர்களாக இருப்பார்கள்.

இரண்டாம் வகை:

kaal viral jothidam in tamil – மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல்கள் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இவர்கள் மிகவும் தைரியசாலியாக இருப்பார்கள். அனைத்து காரியங்களையும் துணிச்சலுடன் செய்வார்கள். இவர்களுக்கு வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல விரும்புவார்கள். முன்கூட்டியே இவர்களுடைய அனைத்து காரியங்களையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

 மூன்றாம் வகை:-

மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல்கள் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இவர்கள் மிகவும் பொறுமை அற்றவர்கள் ஆவர். எந்த காரியங்களையும் வெகு சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அதன் காரணமாகவே உடல் சோர்வடைவார்கள். அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க இவர் எந்த விஷயத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களுக்கு நல்ல பேச்சு ஆற்றல் இருக்கும். அனைத்து காரியங்களுக்கு மிகவும் நல்ல முடிவுகளை எடுப்பார்கள்.

நான்காம் வகை:

மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல்கள் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இவர்கள் மிக சிறந்த சிந்தனையாளராக இருப்பார்கள். மிகவும் பொறுமைசாலியும் கூட. இவர்கள் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் பலமுறை யோசித்த பிறகே அந்த காரியத்தை செய்ய தொடங்குவார்கள். இவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்சனையையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள்.

ஐந்தாம் வகை:

மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கால் விரல் அமைப்பு உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இவர்கள் வேலை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement