குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 கடகம்

Guru Peyarchi 2021 to 2022 Kadagam in Tamil

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 கடகம்: வணக்கம் நண்பர்களே.. இந்த பதிவில் கடக ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் இந்த வருடம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். சனியின் வக்ர நிவர்த்தியால் கடந்த வருடம் கடக ராசியினர் பெரும் கஷ்டத்தினை அனுபவித்து வந்தனர். இந்த வருடம் நல்ல பலன்களை அளிக்க உள்ளார். உங்களுடைய அனைத்து கஷ்டங்களும் விலகி வருகின்ற குரு பெயர்ச்சியும் சனி வக்கிர நிவர்த்தியும் உங்கள் வளர்ச்சிக்கு கண்டிப்பாக துணை நிற்கும். சரி வாங்க இந்த ஆண்டு குரு பெயர்ச்சி பலனானது கடக ராசியினருக்கு (guru peyarchi 2021 to 2022 kadagam) எப்படி உள்ளது என்பதை விரிவாக படித்தறியலாம்.

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

2021 கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:

2021 கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள்

kadagam guru peyarchi 2021 to 2022 in tamil: கடக ராசிக்கு திடீர் ராஜ யோகத்தையும், எதிர்பாராத பணவரவையும் தரக்கூடிய ஆயுள் ஸ்தனமான 8-ஆம் இடத்திற்கு குரு பகவான் மாற இருக்கிறார். இந்த பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு தொழில் சாதகமாக அமையும். இந்த பெயர்ச்சியில் மனதிற்கு நிம்மதி கிடைக்கக்கூடும். எட்டாம் இடத்தில் இருக்கும் குரு தனது விசேஷ பார்வையால் உங்களுடைய ராசிக்கு 12, 02, 04-ம் இடங்களை பார்ப்பார். இதனால் நல்ல பலன்களை பெறலாம்.

புகழ்: குருவின் பார்வை கிடைப்பதால் எதையும் சமாளிக்கும் மன தைரியம் உங்களுக்குள் பிறக்கும். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் நல்ல புகழ் அடைவீர்கள். இளைய சகோதரர்களால் நன்மை கிடைக்கும். உங்களுடைய மூத்த சகோதர சகோதரி முடிந்த உதவிகளை செய்வார்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை பாராட்டி மகிழ்வார்கள்.

யோகம்: பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்தால் ஆன கழுத்து நகைகளை வாங்கும் யோகம் கிடைக்கும். இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும், திருமணம் ஆனவர்களுக்கு நகை அதிகமாக சேரும் வாய்ப்பு இந்த குரு பெயர்ச்சி மற்றும் சனி வக்ர நிவர்த்தியால் நடக்கும். அவரவர் துறை இந்த குரு பெயர்ச்சியில் சாதனை அடைவீர்கள். இதுவரை சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்பு அல்லது பழைய வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.

குடும்பம்: கணவன் மனைவி உறவானது சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து குழப்பங்களும் நீங்கி மகிழ்ச்சி உறவு நீடிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்க முடியும். தந்தை வழியில் நல்ல தகவல் வந்தடையும். வயதானவர்கள் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் இந்த குரு பெயர்ச்சியில் புனித யாத்திரை செல்வீர்கள். கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.

ஆன்மிகம்: நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவீர்கள். பல வருடமாக குல  தெய்வம் தெரியாதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் குல தெய்வம் தெரிவதற்கான வாய்ப்புள்ளது.

திருமண நிலை: திருமணம் ஆகாத இளையவர்களுக்கு திருமணம் ஆகக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குணம்: கடக ராசியினர் மற்றவர்களுக்கு சுய நலம் இல்லாமல் உதவ கூடியவர்கள். மற்றவர்களை விட உங்களுக்கு அறிவுத்திறன் அதிகமாக தான் இருக்கும். மற்றவர்கள் ஆலோசனையினை எப்போதும் கேட்கமாட்டீர்கள். மற்றவர்களை பார்த்தே அவர்களுடைய குணத்தினை கண்டுபிடிக்கக்கூடியவர்கள்.

மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

பொருளாதார நிலை: குரு பெயர்ச்சியின் காலம் முழுவதும் உங்களுடைய பொருளாதார நிலை மற்றும் பணவரவும் நன்றாக இருக்கும். இதுவரை பணப்பற்றாக்குறை பிரச்சனையினால் அவதிப்பட்டவர்களுக்கு குரு பெயர்ச்சியில் பணவரவு பிரச்சனை இருக்காது. மற்றவர்களிடம் கூறிய வாக்கினை காப்பாற்றுவீர்கள்.

வேலை: பல நாட்களாக நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு மனத்திற்கு பிடித்த அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல திருப்பங்களை காண்பீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

தொழில்/ வியாபாரம்: சுய தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த இடர்பாடுகளும் நீங்கி வியாபாரம் சுறுசுறுப்பாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்க, வியாபாரத்தினை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது ஏற்ற நேரம்.

கல்வி: மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இனிய நிகழ்வுகள் நடக்கும். தேர்வுகளில் தோல்விகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் காலையில் குளித்துவிட்டு அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலையை நெய்வேத்தியம் செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் தக்ஷணாமூர்த்தி படத்திற்கு மஞ்சள் நிற பூக்களை வைத்து மஞ்சள் நிற உணவினை வணங்கி வரவேண்டும்.

சனி பகவான் பரிகாரம்: சனி பகவானுடைய வாகனம் காகம். தினமும் காலையில் உணவு உண்ணும்போது உணவில் பாதியை காகத்திற்கு வைத்து காகம் உண்டபிறகு நீங்கள் உணவு உண்டு வந்தால் சனி பகவானின் மிகுந்த கருணை உங்களுக்கு கிடைக்கும். இது போன்று வாழ்நாள் முழுவதும் செய்து வருபவர்களுக்கு ஏழரை சனி காலத்தில் கெடுதலான பலன்கள் எதுவும் ஏற்படாது. மேலும் ஆயுள் அதிகரிக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்