25.01.2023 அன்று விநாயருக்கு இந்த மாதிரி ஒரு தீபம் ஏற்றி வழிபட்டால் போதும் தீராத கடனும் தீர்ந்து வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்..!

kadan theera vinayagar valipadu

கடன் தீர விநாயகர் வழிபாடு

பொதுவாக அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் கடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியாவது கடன் பிரச்சனையை சரி செய்து வீட்டில் பணம் நிலைத்து இருக்க வேண்டும் என்பது நிறைய நபருடைய ஒரு எண்ணமாக இருக்கிறது. அப்படி உங்களுக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால் விநாயருக்கு வருகின்ற சதுர்த்தி அன்று ஒரு தீபம் ஏற்றினால் போதும். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கடன் தொல்லைகளும் நீங்கி வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும். மேலும் அந்த தீபத்தை எந்த நேரத்தில் எப்படி ஏற்ற வேண்டும் என்று நாம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள்..!

விநாயகரை வழிபடும் முறை:

 கடன் தீர விநாயகர் வழிபாடு

உங்களுக்கு தீராத கடன் பிரச்சனை இருந்தால் வருகின்ற 25.01.2023 அன்று சதுர்த்தி வருகிறது. அதனால் நீங்கள் அன்று விநாயகரை நினைத்து ஒரு விளக்கு ஏற்றினால் போதும் கடன் தொல்லை சரியாகி வீட்டில் பணம் சேரும்.

முதலில் நீங்கள் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு நீங்கள் தலை குளித்து விடுங்கள்.

அதன் பிறகு உங்களுடைய  வீட்டில் உள்ள பூஜை அறையில் விநாயகருக்கு முன்பு மஞ்சளினால் ஒரு பிள்ளையார் செய்து அதற்கு குங்குமத்தினால் பொட்டு மற்றும் பூ வைத்து விடுங்கள்.

அடுத்ததாக ஒரு பெரிய தாம்பூலம் தட்டு எடுத்துக்கொண்டு அதில் 5 செம்பருத்தி இலையின் முனைகள் நடுவே ஒன்றாக இருக்கும் படி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது செம்பருத்தி இலையின் மீது 5 ரூபாய் நாணயங்களை தனித்தனியாக வைத்து விடுங்கள். பிறகு அந்த தாம்பூலம் தட்டின் நடுவே ஒரு அகல் விளக்கு வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்ச திரிநூல் போட்டு விளக்கு ஏற்றி அதனுடன் ஏதாவது ஒரு பிரசாதம் செய்து விநாயகரை மனதில் நினைத்து வணங்கி கொள்ளுங்கள்.

 குறிப்பாக நீங்கள் இந்த தேங்காய் எண்ணெய் விளக்கினை புதன் கிழமை சதுர்த்தி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மட்டும் வழிபட வேண்டும். 

உங்களுடைய வழிபாடு முடிந்த பிறகு மறுநாள் காலையில் அந்த நாணயங்களை உங்களுடைய பர்சில் வைத்துக்கொண்டு செம்பருத்தி இலைகளை செடியின் மீது போட்டு விடுங்கள்.

இது மாதிரி சதுர்த்தி அன்று விநாயருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை விரைவில் நீங்கி பண வரவு பெருகும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ அதிவேகத்தில் பணக்காரர் ஆக பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்