உங்கள் வீட்டை பார்த்து காகம் அடிக்கடி கரைவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

kagam karaiyum palan

காகம் கரையும் பலன்

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பதிவில் உங்கள் வீட்டை பார்த்து அடிக்கடி காகம் கரைந்து கொண்டே இருக்கும் இதற்கான காரணம் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப்போகின்றோம். காக்கை ஆனது சனிபகவானின் வாகனம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக காக்கை கருப்பு நிறத்தில் இருப்பதால் அதை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால்  இந்த காகத்தை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அதிகமாக வணங்கி வரும் ஒரு பறவையாகவும்  இருக்கிறது. பொதுவாக அமாவாசை அன்று காக்கைக்கு உணவளிப்பது  இறந்து போனவர்களுக்காக  உணவளிப்பது என்று சொல்லப்படுகிறது.  இப்படி நாம் தெய்வமாக வணங்கி வரும் காகம் உங்கள் வீட்டில் கரைவதற்கு காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?

காகம் கரைந்தால் என்ன நடக்கும்:

நீங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் காக்கை உங்கள் வீட்டை பார்த்து கரைந்து கொண்டே இருக்கும். நாம் அதை துரத்தினாலும் மறுபடியும் வந்து கரையும், இதை சில பேர் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்று கேலியாகவும் சொல்வார்கள்.

பொதுவாக காக்கைக்கு என்ன நடக்க போகிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நன்றாகவே தெரியும்.  நாம் பொதுவாக ஒரு காக்கைக்கு சாதம் வைத்தால் அது தனியாக சாப்பிடாமல் ஒரு கூட்டத்தையே அழைத்துக்கொண்டு வரும் அப்படிப்பட்ட காகம் உங்களுடைய வீட்டை பார்த்து கரைவதற்கு காரணம் என்ன தெரியுமா.? காக்கை உங்கள் வீட்டை பார்த்து கரைவதற்கு அவசியம் உங்கள் வீட்டில்  ஒரு நன்மை நடக்க போகிறது என்று உணர்த்துகிறது. இதுபோல் உங்கள் வீட்டை பார்த்து கரையும்  காக்கைக்கு ஒரு கைப்பிடி அளவு சாதம்  வையுங்கள்.

நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஒரு சில நேரங்களில்  உங்களுடைய தலையிலோ, முதுகிலோ காக்கை எச்சம் செய்துவிடும்,  அப்போழுது  யாராக இருந்தாலும் அதிகமான கோவம் வரும்,  காக்கை எச்சம் போட்டால் உங்களுக்கு ஏதோ கெட்ட  சகுனம் நடக்க போகிறது என்று உணர்த்துகிறது. இதனால் தான் உங்கள் மீது எச்சம் செய்து, அந்த கெட்ட சகுனத்தில் இருந்து விலகுவதற்காக உங்களை தாமதிக்க வைக்கிறது.

மேலும் இனிமேல் உங்கள் வீட்டை பார்த்து காகம் வந்து கரைந்தால் அதை வரட்டாமல் சாதம் மட்டும் வையுங்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்