கனவு பலன்கள் | Kanavu Palangal in Tamil
கனவு பலன்கள் / kanavu palan:- நாம் உறங்கும்பொழுது வரும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலனுண்டு. சிலர் கனவினை நினைவுகளின் கற்பனை என்பது தான் கனவு என்று கூறுகின்றன. அதாவது மனிதர்களின் ஆழ்ந்த மனதில் நினைவாக இருப்பதுதான் கனவு என்று கூறுகின்றன. கனவு என்பது பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது தான் அனைவர்க்கும் வரும். சரி இந்த பதிவில் நாம் கனவில் என்ன வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!
Kanavu Palangal in Tamil / கனவு பலன்கள்..!
மற்றவர்களை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
kanavu palangal in tamil: நாம் மற்றவர்களை அடிப்பது போல் கனவு கண்டால், தங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கப்போவதாக அர்த்தமாகும் மேலும் புகழ் பலமடங்கு பெருகும்.
விபத்து ஏற்பட்டது போல் கனவு வந்தால் என்ன பலன்?
தங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு காயமடைந்ததுபோல் கனவு கண்டால் தன அபிவிருத்தி உண்டாகும். இருப்பினும் கத்தி அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டது போல் கனவு கண்டால் அது தங்களுக்கு நன்மை அளிக்காது. தங்களுக்கு ஏதாவது பழி சொல் வந்து சேரும்.
அரசாங்கத்தை சேர்ந்தவர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
kanavu palangal:- அதாவது ஜனாதிபதி, பிரதமர் போன்றோர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும்.
அதேபோல் திருமணம் ஆகாத இளம்பெண்கள் மேல் கூறப்பட்டுள்ளது போல் கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன், அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என்று அர்த்தமாகும்.
அரச குடும்பத்தாருடன் பழகுவது போல் கனவு கண்டால், உங்களின் நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும்.
All Kanavu Palangal in Tamil |
தேவலோக பெண் கனவில் வந்தால் என்ன பலன்?
kanavu palan: ஆண்கள் கனவில் தேவலோக பெண் வந்தால், எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு உண்டாகும்.
அதேபோல் திருமணமாகாத பெண்களின் கனவில் தேவலோக பெண் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
திருமணமான பெண்கள் கனவில் தேவலோக பெண் வந்தால் மிகுந்த பொருள் வரவு உண்டு.
அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்?
kanavu palangal:- அழகில்லாத பெண் ஒருத்தியை, திருமணம் ஆகாத ஆண் மகன் கனவில் வந்தால். அந்த ஆண் மகனின் வருங்கால மனைவி மிகவும் அழகானவளாக இருப்பாள் என்று அர்த்தமாகும்.
அதிசயமானவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
kanavu palangal in tamil:- பார்ப்பதற்கே கொஞ்சம் வித்தியாசமானவர்கள் அல்லது வித்தியாசமான மற்றும் நூதனமான பொருட்களை தங்கள் கனவில் கண்டால் தங்களுக்கு எதிர்வரும் தீமைகளை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாகும். அதாவது நம்மிக்கை மோசடி, ஏமாற்றம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சண்டை போடுவதாக கனவு கண்டால்:- சண்டை சச்சரவுகள், அடிதடி, தகராறு போன்றவற்றில் தாங்கள் சிக்கிக்கொண்டு தவிப்பது போல் கனவு கண்டால், தங்கள் வாழ்க்கை அமைதியானதாகவும், சுற்றியிருக்கும் அனைவருடனும் சுமுக நட்பு கொண்டவராகவும் அமைவிர்கள்.
அதேபோல் சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.
யாராவது அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கனவு பலன்கள்:- தங்களுக்கு தெரிந்த அல்லது யாரோ ஒருவர் வாய்விட்டு அழுவது போல் கனவு கண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் பலவகையான இடையூறுகள் ஏற்படும் என்று அர்த்தமாகும்.
தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
kanavu palangal:- தங்களது கனவில் ஏதாவது ஆபத்துகளோ அல்லது இடையூறுகளோ ஏற்படுவது போல் கனவு வந்தால், இந்த கனவுக்கு எதிர்மறையாக தங்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நிம்மதியாகவும் அமையும்.
அதேபோல் மற்றவர்கள் ஆபத்தில் இருப்பது போல் கனவு கண்டால் நண்பர்களால் தங்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படும்.
அரிசி கனவில் கண்டால் என்ன பலன்?
kanavu palan: நாம் அரிசியை கனவில் கண்டாலோ அல்லது கடைகளில் வாங்கி வருவது போல் கனவு கண்டால் அவர்கள் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து தனலாபம் பெறுவார்கள்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..! |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |