கன்னி ராசி பொதுவான குணங்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கன்னி ராசி நண்பர்களின் பொதுவான பலன்களையும் அவர்களின் குணங்களையும் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். உத்திரம் 2,3,4 பாதம் மற்றும் அஸ்தம் சித்திரை 1,2 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் கன்னி ராசி உடையவர்கள் ஆவர். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆகும். மேலும் நம் பதிவில் கன்னி ராசி நண்பர்களின் பலன்கள், குணங்கள் மற்றும் அதிர்ஷ்ட நட்சத்திரம், எண்கள், கலர்கள், பெயர் எழுத்துக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் |
கன்னி ராசி பலன்:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே வாழ்வார்கள். இவர்கள் காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு கிடைத்த வாழ்க்கை துணை இவர்கள் விருப்பப்பட்டது போல் அமையும். எந்த ஒரு காரியங்களையும் செய்வதற்கு முன்பு குடும்பத்தில் கலந்து பேசிய பிறகு செயல்படுவார்கள். உழைப்பை அதிகம் விரும்புவார்கள. பணத்தை அதிகம் செலவு செய்ய மாட்டார்கள். இவர்கள் கையில் பண புழக்கம் எப்போதுமே அதிகமாக இருக்கும். வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்வார்கள். வீடு, வாகனம் போன்ற வசதிகளை அமைத்து கொள்வார்கள்.
கன்னி ராசி குணங்கள்:
- கன்னி ராசிக்காரர்கள் அதிகம் கோபப்படுவார்கள்.
- இவர்கள் எதையும் மறக்கவே மாட்டார்கள். அதிகம் நியாபக சக்தி உடையவர்கள்.
- சூழ்நிலைக்கு ஏற்றவாறு குணங்களை மாற்றி கொள்வார்கள்.
- இந்த ராசியில் பிறந்தவர்கள் தனக்குதான் எல்லாம் தெரியும் என்று குணங்களை கொண்டிருப்பார்கள்.
- ஆன்மிகத்தில் அதிகம் ஆர்வமுடையவராக இருப்பார்கள்.
- பயணங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
- மற்றவர்களை வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள்.
- இவர்களுக்கு உணவுகள் சாப்பிடுவதை அதிகம் விரும்புவார்கள்.
- புதிதாக உடை அணிவதை அதிகம் விரும்புவார்கள்.
- இவர்கள் பேச்சில் எல்லோரையும் கவர்ந்து விடுவார்கள்.
- மற்றவர்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடித்து திருத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
- இவர்களின் பேச்சில் அதிகம் நகைச்சுவைதான் கலந்திருக்கும்.
- எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
- இவர்கள் அதிகம் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள்.
- யாரும் இவரை ஏமாற்றுவது கடினம்.
- இவர்களின் அதிபதி புதன் என்பதால் இவர்கள் அழாகாக இருப்பார்கள்.
- இவர்கள் நடக்கும் பொழுது அதிவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
- இவர்கள் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.
- மற்றவர்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்வார்கள்.
- ஒரு செயலை செய்து முடிப்பதற்கு அதிகம் திட்டமிடுவார்கள்.
- எந்த ஒரு செயலிலும் நிதானத்துடன் இருப்பார்கள்.
- இவர்கள் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள்.
- இவர்களின் தோற்றத்தை வைத்து வயது என்னவென்று அறிந்திவிட முடியாது.
- இவர்களுக்கு அச்சங்களும், கூச்சங்களும் அதிகம் இருக்கும்.
கன்னி ராசி அதிர்ஷ்ட பலன்கள்:
அதிர்ஷ்ட எண்கள் | 4,5,6,7,8 |
அதிர்ஷ்ட நிறம் | பச்சை, நீலம் |
அதிர்ஷ்ட கிழமை | புதன், சனி |
அதிர்ஷ்ட கல் | மரகத பச்சை |
அதிர்ஷ்ட தெய்வம் | ஸ்ரீ விஷ்னு |
பெயர் எழுத்துக்கள்:
உத்திரம் பாதம் 2,3,4 : டோ,ப, பி
அஸ்தம்: பு, பூ, ஷ, ந, ட
சித்திரை பாதம் 1,2: பே,போ, ர,ரி
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |