கார்த்திகை விரதம் இருப்பது எப்படி? | Karthigai Viratham Irupathu Eppadi

Karthigai Viratham Irupathu Eppadi

கிருத்திகை விரதம் இருப்பது எப்படி? | Karthigai Viratham Irukum Murai in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் 09.02.2022 நாளை கார்த்திகை விரத தினத்தை முன்னிட்டு இறைவனுக்கு புதிதாக கார்த்திகை விரதம் எடுக்கும் பக்தர்களுக்கு இந்த பதிவில் கார்த்திகை விரதத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று சில ஆன்மீக குறிப்புகளை தெரிந்துக்கொள்ளலாம். தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபடுவதற்கு கந்த சஷ்டி விரதம் இருப்பது போன்று பக்தர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது கார்த்திகை விரதமும். கார்த்திகை விரதம் எடுப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

கார்த்திகை விரதம் இருப்பது எப்படி:

முருகப்பெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்ற பெயரை பெற்று அவருடைய அருளை அடைவதற்கு நாம் எடுக்கும் விரதம் தான் இந்த கார்த்திகை விரதம்.

முருகப்பெருமானுக்கு கார்த்திகை விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு எடுத்துக்கொண்டு அன்று இரவு உணவு சாப்பிடாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை விரதம் எடுப்பவர்கள் அன்று நாள் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடாமல் முருகனின் மந்திரங்கள், ஸ்கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது.

கட்டாயமாக உணவு சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். விரத தினத்தன்று பகல் மற்றும் இரவு தூங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

சோமவார விரதம் இருக்கும் முறை

கிருத்திகை விரதம் பலன்கள்:

கார்த்திகை விரதம் எடுப்பவர்கள் அன்றைய நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி வந்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்களுக்கு உடலில் எந்த நோயும் அண்டாமல் நெடுநாள் வாழ முருகனின் அருள் கிடைக்கும்.

12 ஆண்டுகள் வரை இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு முருகப்பெருமானின் தரிசனம் முழுவதும் கிடைத்து மனதில் மரணம் குறித்த பயங்கள் நீங்கி இறுதியில் முக்தி நிலை கிடைக்க பெறுவார்கள்.

முருக பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கார்த்திகை விரதத்தை பின்பற்றுங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்