கருநாக்கு உள்ளவர்கள் சொல்லும் வாக்கு
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! “தீயினால் சுட்ட புண் ஆறது நாவினால் சுட்ட வடு” என்பது திருக்குறள். ஒருவரை நாம் நம்முடைய நாக்கினால் கடினமான வார்த்தைகளால் பேசும்போது அது அவர்களால் மறக்கவே முடியாது. அது அவர்களுக்கு ஆறாத காயமாக இருக்கும். அதுபோல கடினமான வார்த்தைகளால் பேசுபவர்களில் ஒரு சிலருக்கு கரு நாக்கு இருக்கிறது. அத்தகைய கரு நாக்கு உள்ளவர்கள் திட்டினால் அதை நினைத்து சிலர் கவலை படுவார்கள். கரு நாக்கு உள்ளவர்கள் சொன்ன வாக்கு பலிக்குமா.! பலிக்காதா.! என்று நீங்கள் இனி கவலை பட வேண்டாம். இன்றைய பதிவின் மூலம் அதனை தெரிந்து கொள்ளலாம்.
கரு நாக்கு என்றால் என்ன.?
கரு நாக்கு என்பது ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய காரணங்களால் பிறக்கும் போதே இருக்கும். முதலில் அந்த கரு நாக்கு ஒரு சிறிய இடத்தில் தான் வரும். அதன் பிறகு தான் நாக்கின் அனைத்து பகுதியிலும் கரு நாக்கு பரவ ஆரம்பமாகும்.
கரு நாக்கு பலன்:
கரு நாக்கு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே காணப்படும். அத்தகைய கரு நாக்கு உள்ளவர்கள் தன்னை தானே புகழ்ந்து பேசி கொள்ளமாட்டார்கள்.
இவர்கள் இடத்திற்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வார்கள். ஆனால் எப்போதும் ஒரு மாதிரி குணம் உடையவராக இருக்க மாட்டார்கள்.
பணிவு, துணிவு இரண்டிற்கும் இடைப்பட்ட குணம் கொண்டவராக இருப்பார்கள். கரு நாக்கு உள்ளவர்கள் ஒரு சில சூழலுக்கு மேல் அவர்கள் படும் கோபத்தை பொறுத்து கொள்ள முடியாது.
அதுபோல ஒரு சிலர் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கரு உள்ளவர்கள் இருப்பார்கள்.
கரு நாக்கு உள்ளவர்கள் சொல்லும் வாக்கு ஒரு சில இடத்தில் பலிக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
கரு நாக்கு உள்ளவர்கள் எப்போதும் மற்றவர்களை துன்ப படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்கு சொல்ல மாட்டார்கள். சூழ்நிலையை பொறுத்தே அவர்கள் சொல்லும் வாக்கு இருக்கிறது.
இத்தகைய கரு நாக்கு உள்ளவர்களின் குடும்பம் ஆரம்ப காலத்தில் இருந்து மற்றொருவரால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் போது அந்த தலைமுறையில் கரு நாக்கு உள்ளவர்கள் சொல்லும் வாக்கு அந்த இடத்தில் பலிக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள்.
அதுபோல அமாவாசை, அஷ்டமி, நவமி, பாட்டி முகம் இந்த மாதிரி நாட்களில் கரு நாக்கு உள்ளவர்கள் அவர்களை அறியாமலேயே ஒரு சில நேரத்தில் அவர்கள் சொல்லும் வாக்கு பலிக்கும் என்று வாஸ்துப்படி சொல்லப்படுகிறது.
அதுபோல அவர்கள் சொல்லும் வாக்கு நன்மையாகவும் இருக்கலாம் அல்லது தீமையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
கரு நாக்கு உள்ளவர்களுடன் நீங்கள் நட்பு கொண்டிருந்தால் உங்களுக்கு எப்போதும் நன்மையாகவே இருக்கும்.
எனவே யாராக இருந்தாலும் அவர்களை துன்புறுத்தும் போது தான் அவர்கள் நம்மை பேசுபார்கள். அதனால் மற்றவர்களை துன்புறுத்த கூடாது.
இதையும் படியுங்கள்⇒ கன்னத்தில் குழி விழுந்தால் இவ்வளவு நன்மைகளா?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |