செல்வம் அதிகரிக்க பீரோவில் இந்த ஒரு பொருளை வைத்தால் போதும்

Advertisement

வீட்டில் செல்வம் அதிகரிக்க

நீங்கள் எவ்வளவு தான் சம்பாரித்தலும் வீட்டில் பணமே இல்லை என்று கவலைப்படுகிறீர்களா.! இனி கவலைப்படாதீர்கள்.! ஏனென்றால் அதற்கான வழிமுறைகளை தான் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம். வழிமுறை என்று சொன்னவுடன் பரிகாரமோ இருக்குமோ என்று பயப்படாதீர்கள். அனைவரும் வீட்டில் பணத்தை பீரோவில் தான் வைப்போம். அதனால் அந்த பீரோவில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தாலே போதும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

Pana Varavu Athikarikka in Tamil:

 பீரோவில் பணம் சேர்ப்பது எப்படி

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அந்த கிண்ணம் முழுவதும் உப்பு நிறைந்திருக்க வேண்டும். முக்கியமாக  பயன்படுத்திய கிண்ணமாக இருக்க கூடாது, புதிய கிண்ணமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

வீட்டில் செல்வம் அதிகரிக்க

அடுத்து 5 கிராம்பு எடுத்து கொள்ளுங்கள். இந்த கிராம்பின் காம்புகள் உடையாமல் இருக்க வேண்டும். பின் புதிதாக இருக்க கூடிய 5 ஏலக்காய்,  5 நாணயங்கள், முகத்திற்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் தூள் எடுத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது உப்பு கிண்ணத்தை எடுத்து உப்பின் மேலே மஞ்சள் தூளை தூவி கொள்ளுங்கள். அதன் மேலே 5 நாணயங்களையும் ஒவ்வொன்றாக வைத்து  நாணயத்தின் மேலே 1 கிராம்பு, 1 ஏலக்காய் வைக்க வேண்டும். இந்த கிண்ணத்தை பீரோவுக்கு வெளியில் மேல் பகுதியில் வைக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை  வெள்ளிக்கிழமை காலை 06.00 AM  மணி முதல் 07.00 AM மணி வரை செய்ய வேண்டும். இந்த கிண்ணத்தில் உள்ள பொருட்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுங்கள். நாணயத்தை தவிர மற்ற பொருட்களை ஆறு அல்லது கால் படாத இடத்தில் தூக்கி போடுங்கள். நாணயத்தை வீட்டில் சேமித்து கொண்டே இருங்கள். இந்த நாணயத்தை சேமிப்பதால் வீட்டில் செல்வம்  அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement