இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தினால் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

keeping clothes of dead person in hinduism in tamil

இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவீர்களா?

இன்றைய பதிவு அனைவருக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் அனைத்து நல்ல உறவுகளுக்கும் வணக்கம்..! நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு அதிக தூரம் சென்றால் அவர்கள் ஞாபகமாக என்ன இருக்கிறதோ அதனை நம்மிடமே வைத்துக்கொள்வோம். அது அவர்கள் பக்கத்தில் இருப்பது போல் ஒரு ஞாபகத்தை ஏற்படுத்தும். அதனால் அதனை பயன்படுத்துகிறோம் ஆனால் அதேபோல் நம்மை விட்டு மிக தூரத்தில் அதவாது இறந்து விட்டார்கள் என்றால் அவர்களின் பொருட்களை பயன்படுத்தினால் நமக்கு நல்லதா கெட்டதா வாங்க தெரிந்துகொள்வோம்..!

இறந்தவர்களின் பொருட்கள் பயன்படுத்தலாமா?

சிலருடைய மரணமானது இயற்கையாக நடக்கும், சிலர் மரணம் செயற்கையாக நடக்கும் இதுபோல் அப்போது அவர்களின் மீது பாசம் வைத்திருப்பவர்கள் அவர்களின் பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் அது தவறு என்றும் சொல்ல முடியாது நல்லது என்றும் சொல்ல முடியாது. காரணம் அவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் என்ன பொருட்கள் பயன்படுத்தினார்களோ அந்த பொருட்களின் மீது அவர்கள் கவனம் இருக்கும்.

இறந்தவர்களின் கவனம் எப்படி அந்த பொருட்களின் மீது இருக்கும் என்று யோசிப்பீர்கள் காரணம் அவர்களின் உடலிருந்து மட்டுமே உயிர் புரிந்திருக்குமே தவிர அவர்கள் ஆன்மாவாக இருப்பார்கள். அப்போது அவர்களின் பொருட்கள் மீது அதிக கவனத்தை வைத்துக்கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக: நமக்கு ஒரு பொருட்கள் பிடிக்கும் என்றால் அந்த பொருட்களின் மீது கவனம் செலுத்துவோம் அதேபோல் அந்த பொருட்களின் மீது யாராவது கை வைத்துவிட்டால் அவ்வளவு கோவம் ஏற்படும்.

அதேபோல் நமக்கு பிடித்த பொருட்களை நமக்கு பிடித்தவர்களிடையே கொடுப்போம் ஏனென்றால் அவர்கள் அதனை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்கள் மீது இருக்கும் இல்லையென்றால் அவர்களை நமக்கு மிகவும் பிடிக்கும் அதனால் நாம் அவர்கள் பரிசாக நமக்கு பிடித்த பொருட்களை கொடுப்போம்.

 அதேபோல் தான் ஆன்மாவும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மீதி கவனம் வைத்திருப்பார்கள். இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கோவம் வரும் அதனை அவர்கள் நேரடியாக காட்டமுடியாமல் வேறு வழியாக காட்டுவார்கள். அது எப்படி என்றால் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை நீங்கள் எடுத்து பயன்படுத்த ஆரம்பித்தால் அவர்களுக்கு 30 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு ஆபத்துகள் நடக்கும் இல்லையென்றால் அதன் மூலமாக பல கஷ்டங்கள் வந்து சேரும். 

ஆகையால் இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்த 30 நாட்கள் போதும் அதன் மூலமாக நல்லது நடக்கிறதா அல்லது தீமைகள் நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.

இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்