கோவிலுக்கு செல்லும் முறை
வணக்கம் அனிமிகம் நண்பர்களே..! கோவிலுக்கு செல்வது சில நபர்கள் செல்வார்கள். சில நபரகள் செல்ல மாட்டார்கள். கோவிலுக்கு செல்வதால் நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் நீங்கி நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது. இன்னும் பல நன்மைகள் கோவிலுக்கு செல்வதால் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது போல் வீட்டிற்கு வரும் வரை சில செயல்களை செய்ய வேண்டும். அது என்னென்ன செயல்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
கோவிலுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டியவை:
வீட்டில் உள்ள கடவுளுக்கு விளக்கேற்றி வணங்கிய பிறகு கோவிலுக்கு செல்ல வேண்டும்.
முதலில் கோவில் நடை மூடியிருக்கும் போதும் சரி, கடவுளுக்கு அலங்காரம் செய்யும் போது திரை மூடியிருக்கும் போதும் கடவுளை வழிபட கூடாது.
இதையும் படியுங்கள் ⇒ கோவிலுக்கு செல்லும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
கடவுளுக்கு கடையில் விற்கும் பூவை வாங்கி வணங்குவதை விட உங்களின் கைகளால் பூவை கட்டி கடவுளுக்கு சாத்துவது நல்லது.
கடவுளை வணங்கி வந்த பிறகு தானம் வழங்காமல் வழிபடுவதற்கு முன்னரே தானம் வழங்கினால் மன நிம்மதியை கொடுக்கும்.
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டதும் நேராக உங்கள் வீட்டிற்கு தான் வர வேண்டும். ஏனென்றால் நேர்மறை ஆற்றல் அப்போது தான் நம்மை சூழ்ந்திருக்கும்.
கோவிலுக்கு சென்று வந்ததும் கை, கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகு தான் முகத்தை கழுவ வேண்டும். ஆனால் குளிக்க கூடாது.
கோவில்களில் தரப்படும் பிரசாதம், விபூதி, குங்குமம் போன்றவற்றை வீணாக்க கூடாது.
கடவுளுக்கு தீபாராதனை காட்டும் பொழுது கண்ணை மூடி கொண்டு வணங்க கூடாது. கண்ணை திறந்து கொண்டு தான் வழிபட வேண்டும்.
குங்குமம் மற்றும் விபூதியை மோதிர விரலால் நெற்றியில் பூச வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது நாம் இந்த விஷயங்களை செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிட்டும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |