கிருஷ்ண ஜெயந்தி பற்றிய தகவல்
ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று அதே தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும், ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் – பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள். மேலும் கிருஷ்ண ஜெயந்தி பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா.? தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படியுங்கள் ⇒ கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்
Krishna Jayanthi Patriya Thagavalgal in Tamil:
- மனித பிறவியில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடமைகளை செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதை மூலம் கிருஷ்ணர் கூறியுள்ளார்.
- கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் என்ற பெயர்களும் இருக்கிறது.
- கிருஷ்ணர் சிறு வயதிலுருந்தே கோகுலத்தில் வாழ்ந்ததால் கோகுலாஷ்டமி என்று சொல்வார்கள்.
- மகாவிஷ்ணு அவதரித்த 9-வது அவதாரம் கிருஷ்ண அவதாரம் ஆகும்.
- கிருஷ்ண ஜெயந்தி விளையாட்டுகளில் உறியடி விழா சிறப்பாக நடைபெறும்.
- கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் நடைபெறுகிறது.
- கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்ற பெயரில் அழைப்பார்கள்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைகளை கண்ணன், ராதை போல வேடமிட்டு வழிபடுவது நன்மைகளை தரும். அப்படி வேடமிடும் குழந்தைகள் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள்.
- பெண்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று மனம் உருகி வழிபட்டால் திருமணம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவிகிதம் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- கிருஷ்ண நாமத்தை தினமும் சொல்லுபவர்களும், கேட்பவர்களும் புண்ணியம் கிடைக்கும்.
- கிருஷ்ணர் ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்ற பலகாரங்களை செய்து வழிபட வேண்டும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தையின் பாதத்தை வாசலில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
- கிருஷ்ணர் கோகுலத்தில் சிறு வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாடுவதை ராசலீலா என்ற பெயரில் வட மாநிலங்களில் நாடகமாக நடத்தப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |