கும்ப ராசி ஏழரை சனி எப்போது முடியும்?

Advertisement

கும்ப ராசி ஏழரை சனி எப்போது முடியும்?Kumbha Rasi Elarai Sani

ராசி பெயர்ச்சியில் குருபெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன், வருட பெயர்ச்சி பலன் என்று பலவகையான பெயர்ச்சி இருந்தாலும் சனிப்பெயர்ச்சி பலன் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். மேலும் முக்கியத்துவமான ஒன்றாக சொல்லலாம். ஏன் என்றால் இந்த பெயர்ச்சி மட்டும் தான் ஒவ்வொரு ராசிக்கும் வருடம் பலன் அளிக்க கூடியது. ஆக இந்த இரண்டரை வருட சனி பெயர்ச்சி நமக்கு எப்படி இருக்கும், அடுத்த சனி பெயர்ச்சி எப்போது வரும் என்று அனைவரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அதேபோல் தற்பொழுது உள்ள சனி பெயர்ச்சி எப்பொழுது முடிவடையும் என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் கும்ப ராசி ஏழரை சனி எப்போது முடிவடைகிறது என்பது குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

கும்ப ராசி ஏழரை சனி எப்போது முடியும்?

மகரம் ராசியில் இருக்கும் சனி பகவான் எப்போது கும்ப ராசிக்கு மாறுகிறார் என்றால் திருகணிதம் பஞ்சாங்கத்தின் படி 2023 ஜனவரி 17 தேதி மாறுகிறார். அதுவே வாக்கிய பஞ்சாங்கத்தின் முறை படி 2023 டிசம்பர் 20 தேதி தான் பெயர்ச்சியாகிறார்.

கும்ப ராசியில் இருந்து சனி எப்போது மீன ராசிக்கு செல்கிறது என்றால் திருகணிதம் பஞ்சாங்கம் முறைப்படி 2025 மார்ச் மாதமும், வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி 2026 மார்ச் மாதத்தில் வருகிறது.

இவற்றில் எது சரியானது என்றால் வாக்கிய பஞ்சாங்கம் என்பது 500 வருடங்களாக திருத்தப்படாத, மாற்றப்படாத பழைய கணித முறையை அப்படியே பின்பற்றி வரும் ஒரு முறை.

ஆனால் திருகணிதம் பஞ்சாங்கம் என்பது பார்த்து கணிக்கப்படும் ஒரு கணிதம் இப்போது உள்ள கிரக நிலைகளை இப்போது உள்ளத்துப்படி பார்த்து அந்த கிரகங்களின் வேகம் மற்றும் அவற்றில் வரக்கூடிய மாற்றங்களையெல்லாம் பார்த்து கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக கணிக்கப்படும் ஒரு கணிதமுறை இது விஞ்ஞானமான ஒரு கணித முறை என்று சொல்லலாம். ஆக திருகணிதம் முறை தான் மிகவும் சரியானது.

ஆக சனி பகவான் உங்கள் ராசியில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சனி ஜெயந்தி அன்று உருவாகும் 3 யோகங்களால் இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நினைய போகிறார்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement