கும்ப ராசியின் காதல் மற்றும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?

kumba rasi thirumana valkai

கும்ப ராசி திருமண வாழ்க்கை

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் கும்ப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்றுதான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பொதுவாகவே கும்ப ராசியில் பிறந்தவர்கள் உயர்ந்த சிந்தனையும், நல்ல குணங்களையும் கொண்டவராக இருப்பார்கள், கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இவர்கள் சிறந்த தொழில் நிறுவனங்களில் இருப்பார்கள், அந்தவகையில் இவர்களின் காதல் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மீன ராசியின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?

கும்ப ராசி காதல் பலன்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் தன்மைகள் அதிகமாவே இருக்கும், இவர்கள் காதலிக்கும் காதலி (காதலன்) பற்றிய கற்பனைகள் அதிகமாவே இருக்கும். இவர்கள் மனத்திற்கு கட்டுப்பாடு வைத்து காதலை நினைத்து விரும்பினால் காட்டாயமாக காதல் திருமணம் நடைபெறும்.

ஒரு சில கும்ப ராசிக்காரர்களுக்கு ஒருவரின் மீதுள்ள ஈர்ப்பு பிரச்சனையில் முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஏதேனும் நல்லதொரு பதவியில் அமர்ந்த பிறகு காதலிப்பது நல்லது. இந்த ராசிக்காரர்கள் காதல் துணையுடன் பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருப்பார்கள்.

கும்ப ராசி திருமண வாழ்க்கை:

கும்ப ராசிக்காரர்கள் வரப்போகும் துணையை  நல்லபடியாக வைத்திருப்பார். அதாவது அன்பாகவும், பொறுமையாகவும் வழிநடத்துவார். இந்த கும்ப ராசியில் உடைவார்கள் மிதுனம், துலாம், விருச்சிகம்  போன்ற ராசியில் உடையவர்களை திருமணம் செய்வது நல்லது. இந்த ராசியில் உள்ளவர்களை திருமணம் செய்வதால் இல்லறவாழ்க்கை நல்லபடியாகவே அமையும்.

கும்ப ராசியின் பெண்களுக்கு வரப்போகும் மாப்பிள்ளைகள் கம்பிரமாகவும், அதிகமாக கோபங்கள் உடையவராகவும், யாருக்கும் பயப்படாத தைரிய சாலியாக இருப்பார்கள்.

இவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கை துணை அழகாகவும், அறிவாகவும் இருப்பார்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கை ஒரு சில நேரம் சந்தோசகமாகவும், ஒரு சில நேரம் சோகமாகவும் இருக்கும்.

கும்ப ராசியில் ஏழாவது லக்கனம் உச்சம்  அடையும் பொழுது பல செல்வாக்குகளுடனும், புகழ்களோடும் இருப்பார்கள். அதே நீச்சம் அடைந்தாள் அதிஷ்டம் இல்லாதவராக இருப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் திருமணம் செய்ய போகும் மாமியார் தேள் கொட்டுவது போல பேசுவார்கள், மாமுனார் அதிகம் கோபம் உடையவராக இருப்பார்கள். இவர்களின் புகுந்த வீடு கிழக்கு திசையில் அமைந்திருக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் கரம் பிடிக்கப்போகும் வாழ்க்கை துணையின் பெயர்கள் ம, மி, மோ, மே, மெ, ட, டி , டு, டே, ஓ (M,D,O,L) என்ற பெயர்களை கொண்டவராக இருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்