திருமண லக்ன பொருத்தம் | Thirumana Lagna Porutham in Tamil
நம் தமிழர் பண்பாட்டில் திருமணம் செய்வதற்கு முன்னர் பொருத்தம் பார்ப்பது வழக்கம். திருமண பொருத்தத்தில் மொத்தம் 10பொருத்தங்கள் உள்ளது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் லக்ன பொருத்தம் பற்றியும் எந்தெந்த லக்னம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாம், திருமணம் செய்யக்கூடாது, ஒரே லக்னத்தில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யலாமா என்பதை பற்றியெல்லாம் படித்தறியலாம் வாங்க.
ஒரே லக்னத்தில் திருமணம் செய்யலாமா?
லக்னம் என்பது சூரிய உதய புள்ளி. சூரியன் உதிக்கும் பொழுது எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே லக்னம் எனப்படும். வேறு வேறு நாளில் பிறந்தவர்கள் ஒரே லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாம்.
உங்களுடைய லக்னம் அல்லது உங்களுக்கு துணைவராக/ துணைவியாக வரக்கூடியவர்களின் லக்னம் 1,3, 5, 7, 9, 11 ஆகிய லக்னத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
இருவருடைய லக்னமும் ஒன்றாக இருந்தால் இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வார்கள். மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
Lagna Porutham in Tamil:
3-வது லக்னம், 11-வது லக்னம் உள்ளவர்கள் மற்றும் 5-வது லக்னம் 9-வது லக்னம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாம். இந்த லக்னத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார்கள்.
இருவருக்கும் 7-வது லக்னம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இவர்களுக்கு மகிழ்ச்சியும், பிரச்சனையும் சமமாக இருக்கும்.
சிம்ம லக்னத்தை தவிர மற்ற லக்னங்கள் ஒரே லக்னமாக இருந்தால் திருமணம் செய்யலாம்.
பெண்ணுடைய கடக லக்னத்திலிருந்து ஆணுடைய மிதுன லக்னத்திற்கு எண்ணினால் 12-வது லக்னம் வரும்.
2என்றால் பண வரவு, 12என்றால் பண விரயம். இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் ஒருவர் மகிழ்ச்சியாகவும், மற்றொருவர் துன்பம் அடைவார். இந்த காரணத்தினால் 2,12 லக்னம் உள்ளவர்கள் திருமணம் செய்ய கூடாது.