வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!

Updated On: September 24, 2024 7:06 PM
Follow Us:
ஆன்மிக தகவல்கள்
---Advertisement---
Advertisement

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..! | Lakshmi Mantra in Tamil | லக்ஷ்மி மந்திரம்

ஆன்மிக தகவல்கள் – நம் வாழ்வில் செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். எனவே நம் வீட்டில் என்றும் செல்வம் செழிக்க லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் ஜபித்து வர அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இந்த மந்திரத்தை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.

அதேபோல் நம் வீடு லக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருக்க வேண்டும் என்றால் மல்லிகை பூவை சுவாமி படத்திற்கும், கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.

மல்லிகை லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பூ. அதேபோல் பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.

மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம்

1. ஓம் அகத்தீசாய நம!
2. ஓம் கரூவூர்தேவாய நம!
3. ஓம் போகதேவாய நம!
4. ஓம் கோரக்கதேவாய நம!

அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.

நினைத்தது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்..!

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி. 
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:

ஓம், ஏம், ஐம், க்லாம், க்லீம், க்லூம், ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ.

லட்சுமி காயத்ரி மந்திரம்:

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும்.

மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்

கோபத்தை குறைக்கும் மந்திரம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now