காதல் பொருத்தம் – உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்?

Love Astrology Tamil

காதல் பலன்கள் – காதல் பொருத்தம் பார்ப்பது எப்படி? – Love Horoscope Tamil

Love Astrology Tamil:- எல்லோரோட வாழ்க்கையிலும் காதல் என்பது இன்றியமையாத ஒன்று. ஒருவருக்கு காதல் வந்துடிச்சின்னா இந்த உலகமே புதிதாக தெரியும். மனசுக்குள்ள படபடன்னு பட்டுப்பூச்சி பறக்குற மாதிரி இருக்கும். காதல் அப்படிங்கிறது ரொம்பவே புனிதமான ஒன்று. கண்டிப்பாக எல்லோரோட வாழ்க்கையிலும் காதல் என்கிற ஒரு விஷயம் இருக்கனும். அப்போதான் அவுங்க வாழ்க்கையானது மிகவும் ஹாப்பியானதாக இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க அதிக ஆர்வமாக இருக்கீங்களா? அப்படினா இந்த பதிவு உங்களுக்கானது தான் இந்த பதிவில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்கு காதல் எப்படி இருக்கும் என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து பயன்பெறுங்கள்.

Love Astrology Tamil

மேஷம் ராசி காதல் பலன்:மேஷ ராசி

பொதுவாக மேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்பவர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம் ராசி காதல் பலன்:

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் சாகசக்காரர்களாக இருப்பர். குறிப்பாக ரிஷபம் ராசிக்காரர்களாகிய நீங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் அதிக உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் ராசி காதல் பலன்:

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக எந்த துறையில் இருந்தாலும் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்களாகிய நீங்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் ராசி காதல் பலன்:

கடக ராசி

கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்துவார்கள். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். இருப்பினும் உங்களிடம் அதிக நம்பிக்கை இருந்தால் அந்த காதலில் வெற்றி பெறுவீர்கள். இருந்தாலும் கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது

சிம்மம் ராசி காதல் பலன்:

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருக்கும். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். இருப்பினு இவர்களுக்கு அவர்கள் நினைத்த காதல் வாழ்க்கை அமையாது. வீட்டில் பார்ப்பவர்களை தான் திருமணம் செய்து கொள்வார்கள். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி ராசி காதல் பலன்:

கன்னி ராசி

பொதுவாக கன்னி ராசிக்காரர்கள் அன்பு குணம் கொண்டவர்கள் மட்டுமல்ல கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்.  இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் ராசி காதல் பலன்:

துலாம் ராசி

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம் ராசி காதல் பலன்:

விருச்சிக ராசி

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். இவர்கள் பொதுவாக பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு ராசி காதல் பலன்:

தனுசு ராசி

 

தனுசு ராசிக்காரர்கள் காதல் செய்தல் அவர்களது காதல் நிச்சயம் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் கோபமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். தனது துணையை அதிகமாக விரும்புவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம் ராசி காதல் பலன்:

மகர ராசி

மகரம் ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம் ராசி காதல் பலன்:

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். இவர்களுக்கு காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் ராசி காதல் பலன்:

மீன ராசி

மீன ராசிக்காரர்களிடம் அதிக அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். மீனம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்