வீட்டில் நீல நிற சங்கு பூ அல்லது வெள்ளை நிற சங்கு பூ இருந்தால் என்ன பலன்?

Advertisement

வீட்டில் எந்த நிற சங்குப்பூ இருந்தால் என்ன பலன்? Lucky Plants for Home in Tamil..!

ஆன்மிக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.. பொதுவாக வீடுகளில் நிறையவகையான பூச்செடிகளை வைத்து வளர்க்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. சிலர் வீட்டில் வைக்கும் செடிகளை ஆன்மிக ரீதியாக வைப்பார்கள், அதுவே சிலர் அழகிற்க்காக வைப்பார்கள். இருப்பினும் பெரும்பாலான வீடுகளில் கண்டிப்பாக நீங்கள் சங்கு பூவை பார்த்திருப்பீர்கள், இந்த சங்கு பூவில் இரண்டு வகைகள் உள்ளது ஒன்று நீல நிறம் மற்றொன்று வெள்ளை நிறம். இந்த இரண்டு நிறங்கள் கொண்ட சங்கு பூவை நமது வீட்டில் வைத்து வளர்பதினால் என்ன பலன் என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

நீல நிற சங்கு பூ:

சங்குப்பூவில் உள்ள இந்த நீல நிற சங்குப்பூ மூன்று தெய்வங்களை குறிக்கிறது. அவை கிருஷ்ணர், நீலகண்டர், சனீஸ்வர பகவான் ஆகிய மூன்று தெய்வங்களை குறிக்கிறது.

ஆக இந்த மூன்று தெய்வங்களுக்கு இந்த நீல நிற சங்குப்பூவை பயன்படுத்தலாம் மேலும் மகாவிஷ்ணுக்கு பிடித்தமான பூவாகும். ஆக இந்த பூவை வீட்டில் வளர்பதினால் மகாவிஷ்ணுவின் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

மகாவிஷ்ணுவின் அருள் கிடைத்தால் மகாலக்ஷ்மியின் ஆஸ்தி கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் செல்வவளம் அதிகரிக்கும்.

மகாவிஷ்ணுவுக்கு இந்த பூவை தினமும் வைத்து பிராத்தனை செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் ஆஸ்தியும் கிடைக்கும் இதன் மூலம் உங்கள் வீட்டில் நிம்மதி, ஆனந்தம், மகிழ்ச்சி ஆகியவை நிலைத்திருக்கும்.

மேலும் இந்த பூவில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்றும் நமது இந்து சாஸ்த்திரத்தில் சொல்லப்படுகிறது.

ஆக மகாலக்ஷ்மி இந்த பூவை வைத்து பிராத்தனை செய்யும் போது வீட்டில் தனவரவு அதிகரிக்குமாம், உணவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் நாம் எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெரும் என்று சொல்லப்படுகிறது.

ஓதியும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நினைத்த காரியம் 10 நாட்களில் நிறைவேற ஒரு கைப்பிடி கல் உப்பு போதும்..!

சனீஸ்வர பகவானுக்கு இந்த பூவை வைத்து வழிபடுவதன் மூலம் ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி இது போன்று பல்வேறு சனி தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த பூவை வீட்டில் வைத்து வளர்ப்பதாக இருந்தால் வடக்கு திசையில் வைத்து வளர்ப்பது மிகவும் பலன் அளிக்கும்.

வெள்ளை நிற சங்குப்பூ:

இந்த வெள்ளை நிற சங்குப்பூ எதற்கு உகந்தது என்றால் பெண் தெய்வங்களுக்கு மிகவும் சிறந்து. வெண்மை நிற பூக்களுக்கு மகாலக்ஷ்மி உகந்த பூக்கள் தான்.

சரஸ்வதி தேவிக்கும் இந்த வெள்ளை நிற சங்குப்பூவை வைத்து வழிபடலாம். இதன் மூலம் சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஓதியும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் இந்த பறவை கூடு கட்டினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement