அதிர்ஷ்டம் வீடு தேடி வருவதற்கான வழிமுறைகள்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆன்மிக பதிவில் பார்க்க இருப்பது என்ன செய்தால் அதிர்ஷ்டம் உங்களின் வீடுதேடி வரும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்க இருக்கின்றோம். நாம் எவ்வளவு முயன்றாலும் நம்மை தேடி அதிர்ஷ்டமும், பணவரவும் வரவே இல்லையே என்று நம்மில் பலரும் எண்ணி வருந்திருப்போம். அப்படி வருந்துபவர்களுக்காகத்தான் இந்த பதிவு. அதனால் இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பை பயன்படுத்தி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரித்துக் கொள்ளுங்கள். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
வீடு தேடி அதிர்ஷ்டம் வருவதற்கான வழிமுறைகள்:
நமது வீடுதேடி எப்படி அதிர்ஷ்டத்தை வர வைப்பது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். அதற்காக நாம் ஒரு தாவரத்தின் வேரை மட்டும் தான் பயன்படுத்தப்போகின்றோம்.
அது என்ன தாவரவேர் அதனை எப்படி பயன்படுத்தினால் நம்மை தேடி அதிர்ஷ்டமும், பணமும் வந்து சேரும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அது என்ன தாவரம் என்றால் குப்பைமேனி செடிதான்.
பொதுவாக இந்த குப்பைமேனி செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த செடியில் பல தெய்வீக சக்திகளும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.?
ஆம் இந்த குப்பைமேனி செடியின் வேரில் தான் மொத்த சக்தியும் உள்ளது. அதனால் இந்த குப்பைமேனி செடியை நீங்கள் எங்கு பார்த்தாலும் அதனுடைய வேரினை மட்டும் தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த வேரை மஞ்சள் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடுத்து அந்த வேரின் மேலே மஞ்சள் தடவி அதில் ஒரு குங்கும பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் வைத்து அதனுடனே இரண்டு ஏலக்காய் மற்றும் சில நாணயங்களையும் போட்டு அதனை நன்கு மூடிக் கொள்ளவும். பின்னர் இதனை உங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி லக்ஷ்மி தேவியை மனதில் எண்ணிக்கொண்டு பூஜை செய்து கொள்ளுங்கள்.. அதன் பிறகு இதனை உங்கள் வீட்டு பீரோவில் அல்லது பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளவும். இதனை செய்வதால் உங்கள் வீட்டிற்கு பணவரவு மற்றும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.
மேலே கூறிய இந்த குறிப்பை வெள்ளிக்கிழமையில் காலை 06:00 மணி – 07:00 மணிக்குள் செய்ய வேண்டும். குறிப்பாக மாலையில் செய்யக் கூடாது.
அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |