மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் | Magam Natchathiram Pengal

Magam Natchathiram Pengal

மகம் நட்சத்திரம் பலன்கள் | Magam Natchathiram Palan in Tamil

ஆன்மிகம் பொறுத்தவரை நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளது. ஒருவருடைய குண நலன்கள் அவர்களின் நட்சத்திரத்தை பொறுத்து அமையும் என்பது ஐதீகம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணமும், சிறப்பம்சமும் உள்ளது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் மகம் ஜகத்தை ஆளும் என்று சொல்லுக்கு உரித்தான நட்சத்திரத்தை கொண்டுள்ள மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் குண நலன்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

பொதுவான பலன்கள்:

  • மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தெளிவான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஆற்றல் எப்போதும் நிறைந்து காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • மகம் நட்சத்திரம் சிம்ம ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுதந்திரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுடைய இலட்சியம் மற்றவர்கள் கண்டு வியக்கும் வகையில் இருக்கும்.
  • பேச்சிலும், வாதத்திலும் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு நடனம், பாட்டு, ஓவியம் வரைவது போன்ற கலை துறையின் மீது அதிக ஆர்வம் இருக்கும்.
  • மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் 20 – 25 வயது வரை தங்களுடைய கல்வி மற்றும் இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும்.
  • முப்பது, நாற்பது வயதிற்கு மேல் சந்திர திசை ஆரம்பிப்பதால் ஒரு சில பிரச்சனைகள் வரலாம். அப்போது மனதை தளரவிடாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டும். சில நேரங்களில் உங்களுடைய முடிவுகளில் தடுமாற்றம் ஏற்படலாம்.

குடும்பம்:

  • குடும்பத்தின் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு சுக்கிர திசை இளமையிலே வரும், வாழ்க்கையில் செல்வம் அதிகம் இருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பீர்கள். செவ்வாய் திசையில் உங்களுக்கு பொருள் சேர்க்கை வருவதற்கான வாய்ப்பு இருக்கும்.

தொழில்:

  • பெரும்பாலானோர்கள் மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை எந்த ஒரு கடினமான வேலையையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

கல்வி:

  • மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். எழுதும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவார்கள்.

மகம் நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

  • பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், பூராடம், அஸ்தம், அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் மகம் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் ஆகும்.

பொருந்தாத நட்சத்திரம்:

  • மிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, திரிதியை, உத்திரம், விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் மகம் நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரம் ஆகும்.

கூற வேண்டிய மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்