Magaram Rasi Palan 2023
இன்றைய ஆன்மிகம் பதிவில் 2023 ஆம் ஆண்டு மகர ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஜோதிடத்தில் 10 ஆவது இடத்தில் இருக்கும் ராசி தான் மகரம். இந்த ராசியில் உத்திராடம், திருவோணம், அவிட்டம் என்று 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. அதுபோல இந்த ஆண்டு மகர ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன நன்மைகள் வர போகிறது என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
2023 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..? |
மகர ராசி பலன் 2023:
இந்த ஆண்டு மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்கிறது. மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டு அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். உங்கள் திறமையாலும் உங்கள் முயற்சியாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
உங்களை தேடி பல புதிய வாய்ப்புகள் வரும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் குறிக்கோளை தேடி பயணிப்பீர்கள். சனிபகவான் உங்கள் இரண்டாவது வீட்டிற்கு நுழைவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
மகர ராசி காதல் மற்றும் திருமணம்:
ஜூன் மாதம் குரு உங்கள் மூன்றாவது வீட்டில் இருப்பதால் இந்த ஆண்டு உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் காணப்பட்டாலும் அது நன்மையாக இருக்கும். அதுபோல திருமணமான மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில நல்ல மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். மகிழ்ச்சியான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மகர ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையிடம் விட்டுகொடுத்து செல்வதால் பல நன்மைகள் உண்டாகும்.
2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு இப்படி தான் இருக்குமா? |
மகர ராசி குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்..?
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இருந்தாலும் இந்த வருடம் முழுவதும் ராகு உங்கள் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்ப வாழ்க்கையில் பதற்றமான நிலை காணப்படும். இந்த ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்கள் குடும்பத்தில் சில நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் ஆசைகளையும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆசைகளையும் நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதிதாக வாகனம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
மகர ராசி தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும்..?
இந்த ஆண்டு கேது பகவான் உங்கள் ராசியின் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பார். அதனால் மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
உங்களின் திறமையால் வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதுபோல ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். அதுபோல ஜூன் மாதத்திற்கு பிறகு உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ஆரோக்கியம் எப்படி இருக்கும்..?
இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |